தீபாவளி நாளில் தங்கம் வாங்கினால் நமது செல்வம் பெருகும் என்பது கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கை. அந்த வகையில் உங்களிடம் 50,000 ரூபாய் இருந்தால் தற்போது எவ்வளவு கிராம் தங்கம் வாங்க முடியும் என்பதை கணக்கிட்டு பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் 13,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 160 ரூபாய் விலை உயர்ந்து 1,05,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல 24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,357 ரூபாய்க்கும் 10 கிராம் 1,43,570 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,768 ரூபாய்க்கும் ஒரு சவரன் 86,144 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி உங்களிடம் 50,000 ரூபாய் பணம் இருக்கிறது என வைத்து கொண்டு கணக்கிட்டால் 22 கேரட் ஆபரண தங்கம் 12% செய்கூலி சேதாரத்துடன் கூடிய தங்க நகையை வாங்கினால் 3%ஜிஎஸ்டி சேர்த்து 3.29 கிராம் தங்கமே உங்களால் வாங்க முடியும். அதாவது 50,000 ரூபாய்க்கு 22 கேரட் தங்கம் அரை பவுன் கூட வாங்க முடியாது.
இதுவே 24 கேரட் சுத்த தங்கம் என்றால் நகை கிடைக்காது நாணயமே வாங்க முடியும். அப்படி பார்க்கையில் 5% செய்கூலி சேதாரம் , 3% ஜிஎஸ்டி போட்டு ஒரு தங்க நாணயம் வாங்கினால் 50,000 ரூபாய்க்கு உங்களால் 3.22 கிராம் தங்க நாணயம் தான் வாங்க முடியும்.
இதுவே 18 கேரட் தங்க நகை என்றால் 50,000 ரூபாய்க்கு 12% செய்கூலி சேதாரத்துடன் கூடிய தங்க நகையை வாங்கினால் 3%ஜிஎஸ்டி சேர்த்து 4.02 கிராம் தங்கமே உங்களால் வாங்க முடியும். செய்கூலி ஏறும் போது உங்களுக்கு கிடைக்கும் தங்கத்தின் அளவு குறைகிறது.
பொதுமக்கள் கடைக்கு சென்று நகை வாங்கும் போது, தங்கத்தின் விலையை மட்டும் கொடுப்பதில்லை. அதனுடன் பின்வரும் இரண்டு முக்கிய கட்டணங்களையும் தான் கொடுக்கின்றனர். ஒன்று, செய்கூலி அதாவது நீங்கள் வாங்கும் நகை மற்றும் கடையை பொறுத்து சேக்கூலி மாறுபடும். பொதுவாக நகைக்கடைகளில் 5% முதல் 18% வரை செய்கூலி வசூலிக்கப்படுகிறது.
அடுத்ததாக ஜிஎஸ்டி, தங்கத்தின் விலை மற்றும் செய்கூலி ஆகியவை சேர்த்த மொத்த தொகையின் மீது நிலையாக 3% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக 50,000 ரூபாய்க்கு நீங்கள் 22 கேரட் ஆபரண தங்கம் வாங்கினால் 3.29 கிராம் தங்கத்திற்கு 43,343 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், இதுவே 12% செய்கூலி சேதாரத்திற்கு 5,201 ரூபாயும் 3% ஜிஎஸ்டிக்கு 1,456 ரூபாயும் செலுத்த வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

