ஆயிரம் உலக அழகிகள் வந்தாலும், 90 கிட்ஸ்களுக்கு அன்றும் இன்றும் என்றும் உலக அழகி என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். 50 வயதை தொட்டு விட்ட பிறகும் இவருக்கான கிரேஸ் அப்படியே இருக்கிறது. பிரபலமான பாலிவுட் நடிகை மற்றும் செல்வாக்குமிக்க பிரபலம் என்ற அந்தஸ்துடன் அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராயின் சினிமா, காதல், திருமணம், சொத்து மதிப்பு உள்ளிட்ட தகவல்களை கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 1994ல் உலக அழகி பட்டத்தை வென்றவுடன் ஒரே நாளில் இரவில் பிரபலமாகி விட்டார். 1997ல் இயக்குனர் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். பாலிவுட் படங்களில் நடித்தபோது, சல்மான் கான், விவேக் ஒபராய் போன்றவர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அபிஷேக் பச்சனை காட்டிலும் வயதில் ஐஸ்வர்யா ராய் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.
குழந்தை பிறந்த பிறகும் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு ஊதியமாக தனது கதாபாத்திரத்தை பொறுத்து ரூ.10-12 கோடி வாங்குகிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். இவர் நடிகை மட்டுமல்ல சினிமா தயாரிப்பாளரும் கூட. 2010 முதல் 2015 வரை திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து அவர் ஒதுங்கி இருந்தார். 2015ல் மறைந்த நடிகர் இர்ஃபான் கானுடன் இணைந்து நடித்த க்ரைம் த்ரில்லர் படமான ஜஸ்பா மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பினார். இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.
சினிமாவில் மட்டுமல்ல விளம்பரங்களில் அவர் நல்லா கல்லா கட்டுகிறார். விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.6-7 கோடி வரை சம்பளம் பெறுகிறார். கல்யாண் ஜூவல்லர்ஸ், லக்ஸ், கோக கோலா, பிலிப்ஸ் மற்றும் டைட்டன் வாட்சஸ் போன்ற பல பிரபலான பிராண்ட்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஐஸ்வர்யா ராய் சில நிறுவனங்களிலும முதலீடு செய்துள்ளார். 2021ல் ஹெல்த்கேர் நிறுவனமான பாசிபிள் நிறுவனத்தில் ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளார். அதற்கு முன் தனது தாயார் விருந்தா கே.ஆருடன் இணைந்து சுற்றுச்சூழல் ஸ்டார்ட்அப் நிறுவனமான அம்பீயில் ரூ.1 கோடி முதலீடு செய்து இருந்தார்.
1994ல் அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஏ.பி.சி.எல்.)என்ற பொழுதுபோக்கு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் சில படங்களை தயாரித்தது. 1996ல் உலக அழகி போட்டியையும் நடத்தியது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் நிர்வாக பிரிவுகளில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் ஏ.பி.சி.எல். நிறுவனம் விஸ்கிராஃபட் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராயின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.776 கோடியாகும். ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு ரூ.430 கோடி தான் என தகவல்.


Click it and Unblock the Notifications