மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் விர்ச்சுவல் கூட்டம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதாவது இன்று நடைபெற உள்ளது. சில நாட்களுக்கு முன்பே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்த நிலையில் குறுகிய கால இடைவெளியில் எதற்காக இந்த விர்ச்சுவல் கூட்டம்.
கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல விமர்சனங்கள் வந்தது மட்டும் அல்லாமல் பெரிய ஆன்லைன் கேமிங் நிறுவனங்களும் அவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளும், நியுஏஜ் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இது பெரும் தடையாக இருக்கிறது என தெரிவித்தனர்.

பல நிறுவனங்கள் ஜிஎஸ்டி கவுன்சில், வர்த்தக அமைச்சகம், நிதியமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியது. இத்துறையில் இருக்கும் சிக்கல் மற்றும் இந்த 28 சதவீத ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பாதிப்புகளை விவரித்தனர்.
இந்த நிலையில் இன்று நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர்கள் குழு ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்து இறுதி முடிவை எடுக்க உள்ளனர்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தில் பல மாதங்களாக கிடப்பில் இருந்த ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகளை நடத்தும் நிறுவனங்களின் விற்றுமுதல் அதாவது Turnover மீது சுமார் 28% ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது எந்த அளவுக்கு பாதிக்கும் என்றால்... ஆன்லைன் கேமிங் துறையில் ஒருவர் 100 ரூபாய் செலுத்துகிறார் எனில் இதில் 28 சதவீத ஜிஎஸ்டி போக 72 ரூபாய்க்கு மட்டும் தான் பெட்டிங் செய்ய முடியும். இந்த பெட்டிங்-ல் போட்ட பணத்தை முழுமையாக வெல்கிறார் அதாவது 72 ரூபாயும் வெற்றி பெற்று திரும்ப எடுக்கிறார் எனில் அவருக்கு platform fees போக 54 ரூபாய் கிடைக்கும். இதில் 30 சதவீதம் TCS வரி பிடித்தம் உள்ளது.
இந்த நிலையில் தான் ஆன்லைன் கேமிங் துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் கடுமையாக விமர்சனம் செய்தது. சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவல் படி இன்று நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு உள்ளதை நடைமுறைப்படுவதற்கு தேவையான சட்ட திருத்தம் மற்றும் விதிகளில் மாற்றங்கள், 28 சதவீத ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கலை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்படும்.

இதை அதிகார்பபூர்வமாக ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது என அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர், ஆனால் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் என தனித்தனியாக வரி மாற்றம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவுகிறது.
இதேபோல் 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங்-ல் ஆன்லைன் மணி கேமிங் என்றால் என்ன? இண்டர்நெட் அல்லது ஈ-நெட்வொர்க் மூலம் இயக்கும் ஆன்லைன் கேமிங் என்றால் என்ன..? போன்ற விளக்கத்தை அளிக்க உள்ளது, இந்த விளக்கத்தின் அடிப்படையில் தான் வரி விதிப்பு இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications