25 நாட்களில் 52 லட்சம் திருமணம்: சும்மா இல்ல பாஸ் ரூ.7.5 லட்சம் கோடி பிஸ்னஸ்!! தங்கம் விலையும் குறையுது!!

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கிவிட்டது. இனி வரும் நாட்களில் கல்யாண மண்டபம் , தங்க நகை கடை நடத்துவோர், கேட்டரிங் சர்வீஸ் நடத்துவோர் என ஏராளமான தொழில்களுக்கு பணம் குவிய போகிறது. அதுவும் அடுத்த 25 நாட்கள் மிக முக்கியமான நாட்களாக இருக்கின்றன.

நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரை நாடு முழுவதும் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறும் அதாவது சராசரியாக ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான திருமணங்கள் நடக்கும் என்றும், இதன் மூலம் சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

25 நாட்களில் 52 லட்சம் திருமணம்: சும்மா இல்ல பாஸ் ரூ.7.5 லட்சம் கோடி பிஸ்னஸ்..!!

இந்த 25 நாள் திருமண சீசன் சில்லறை வணிகம், உற்பத்தி, உணவு, போக்குவரத்து, நகை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தேவையை அதிகரிக்கும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. குறிப்பாக, டெல்லியில் மட்டும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெற்று 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கும்ம் வர்த்தகம் நடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கெய்ட் அமைப்பின் ஆய்வுப் பிரிவான கெய்ட் ஆராய்ச்சி மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சங்கம் 25 மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வர்த்தக தலைவர்கள் மற்றும் 550 வர்த்தக சங்கங்களுடன் தரவுகளை பெற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Also Read

மதிப்பிடப்பட்ட மொத்த வர்த்தகத்தில் சுமார் 4.05 லட்சம் கோடி ரூபாய் பொருட்கள் மற்றும் சில்லறை விற்பனையிலிருந்தும் 3.45 லட்சம் கோடி ரூபாய் சேவை துறையிலிருந்தும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் நகை விற்பனையே 1.2 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது தங்கம் விலை வேறு சரிவில் இருப்பதால் இந்த சீசனில் தங்கம் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடைகள் மற்றும் துணிகள் 90,000 கோடிக்கு விற்கப்படும், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள் மற்றும் ஹோட்டல்கள் வாடகை வருமானம் 60,000 கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண காலத்தில் உணவு வழங்கல், அலங்காரம், புகைப்படம், போக்குவரத்து, அழகுக் கலை சேவைகள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 1.25 கோடி தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என கெய்ட் தெரிவித்துள்ளது.

Recommended For You

இந்த திருமணங்களுக்கு குடும்பங்களின் பட்ஜெட் 5 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் ஆடம்பரத்தை பொறுத்து மாறும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவின் திருமண வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளில் கணிசச்மாக வளர்ந்துள்ளது என கெய்ட் குறிப்பிட்டுள்ளது. அதாவது 2022இல் 32 லட்சம் திருமணங்கள் மூலம் 3.75 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடந்ததாகவும் இந்த ஆண்டு 52 லட்சம் திருமணமாகவும் 7.5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் என இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்றும் கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+