54 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி அன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், பொதுவான வர்த்தக நடைமுறைகளின் காரணமாக குறைவாகவோ அல்லது செலுத்தாமலோ இருந்த ஜிஎஸ்டியை சட்டப்பூர்வமாக்க மத்திய ஜிஎஸ்டி சட்டத்தில் புதிய பிரிவு 11ஏ என்பதை சேர்க்க குழு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் சில வியாபாரிகள் தவறுதலாகவோ அல்லது வேறு காரணங்களால் குறைவான ஜிஎஸ்டி செலுத்தியிருந்தால், அதை சரிசெய்ய இந்த புதிய விதி (பிரிவு 11ஏ) கொண்டுவரப்பட உள்ளது.

மேலும், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசத்தை அரசு அறிவிக்கும் தேதியிலிருந்து தொடங்கும் வகையில் மத்திய ஜிஎஸ்டி சட்டம் 2017-ன் 112வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும் என குழு பரிந்துரைத்தது.
ஜிஎஸ்டி வசூல்: ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 10.3% அதிகரித்து ரூ. 1.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது முக்கியமாக உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவை பரிவர்த்தனைகள் மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கிறது. ஜூலை 1-ஆம் தேதி, 2017 முதல்.. அதாவது ஜிஎஸ்டி முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது 3-வது அதிகபட்ச மாதாந்திர வசூலாகும்.
ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ.16,283 கோடி ரீஃபண்டு திருப்பிச் செலுத்தப்பட்டது. இந்த ரீஃபண்டுகளைக் கணக்கிட்ட பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.66 லட்சம் கோடியாக உள்ளது. இது சுமார் 14.4% வளர்ச்சியை சுட்டிக் காட்டுகிறது.
மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,82,075 கோடியை எட்டியது, இதில் மத்திய அரசு மூலம் வசூல் செய்ப்பட்ட ஜிஎஸ்டி ரூ.32,386 கோடி, மாநில அரசு மூலம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி ரூ.40,289 கோடி, மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ.96,447 கோடி, இழப்பீட்டு கட்டணமாக ரூ.12,953 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜிஎஸ்டி வரி தொடர்பான முக்கிய விவகாரங்களை விவாதிக்க 54வது ஜிஎஸ்டி குழு கூட்டம் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. வரி விகிதங்கள், வரி எளிமைப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்த தீர்வுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications