54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியங்களில் 18% ஜிஎஸ்டி நீக்கப்படுமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், அடுத்த வாரம் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. இந்த 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டியை நீக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. அன்று பல்வேறு துறைகளுக்கும் அரசு பல்வேறு நிவாரணங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காப்பீட்டுத் துறையும் ஜிஎஸ்டி விகிதங்களில் ஏதேனும் சீர்திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்படுமா என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டியை நீக்குவது குறித்து குழு முடிவெடுக்க வாய்ப்புள்ளது. இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால், லைஃப் இன்சூரன்ஸ் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.

 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியங்களில் 18% ஜிஎஸ்டி நீக்கப்படுமா?

குறிப்பாக, லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் அதை நீக்குமாறு கோரி வருகின்றனர்.

"அமைச்சர்கள், பங்குதாரர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்கள் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பெரியதாக இல்லாத பட்சத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் இந்தத் துறையின் கோரிக்கையை சாதகமாகக் கருத வாய்ப்புள்ளது" என்று BDO இந்தியாவின் இன்டைரக்ட் டாக்ஸின் பங்குதாரரான சந்தீப் பரீக் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி ஏன் காப்பீடுகளிலிருந்து நீக்கப்பட வேண்டும்?: சந்தீப் பரீக் கூறுகையில், டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களிலிருந்து ஜிஎஸ்டியை விலக்குவதன் மூலம் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களை மக்களுக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 12% ஆக குறைப்பதை மதிப்பிடவும் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

நிதியமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில், வரி விகிதங்கள், விலக்குகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் உட்பட ஜிஎஸ்டியின் பல்வேறு அம்சங்களில் மக்களுக்கும் அரசுக்கும் ஏற்ற முடிவுகளை எடுப்பதற்காக நிறுவப்பட்டது. இந்தியாவில் ஜிஎஸ்டி கட்டமைப்பை வடிவமைப்பதில் ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜூலை 1, 2017 அன்று, ஜிஎஸ்டி சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்திய ஜிஎஸ்டியின் கீழ், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி 5%, 12%, 18% மற்றும் 28% உட்பட பல்வேறு வரி அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காப்பீட்டு துறையின் இந்த கோரிக்கை செயல்படுத்தப்பட்டு அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்புடன் இன்சூரன்ஸ் பெற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் காப்பீட்டு துறை சார்ந்தவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+