மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தால் ஒத்திவைக்கப்பட்ட மிகவும் முக்கியமான 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், டிசம்பர் 21 அன்று ஜெய்சால்மர்-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது.
முதலில் இக்கூட்டம் நவம்பர் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் மாத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்து மூத்த நிதியமைச்ச அதிகாரி உறுதி செய்தார். இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

முதல் விஷயம்: தற்போது 18% வரியாக உள்ள ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை பூஜ்ஜியமாக குறைப்பது. இதுகுறித்து பீகார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி தலைமையிலான அமைச்சர்கள் குழு முழுமையான வரி விலக்கு வழங்க பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான விசாரணை செய்த அமைச்சர்கள் குழுவில் பீகார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி தலைமை தாங்கினார், இக்குழுவில் உறுப்பினராக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, கோவா, குஜராத், மேகாலயா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநில அமைச்சர்களாக இருந்தனர்.
இரண்டாவது விஷயம்: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களின் மீதான வரியை குறைப்பது. உதாரணமாக 20 லிட்டருக்கு மேற்பட்ட பேக்கேஜ் குடிநீர் மீதான வரியை 18%லிருந்து 5% ஆகவும், 10,000 ரூபாய்க்கு குறைவான மதிப்புள்ள சைக்கிள் மற்றும் எக்ஸ்சைஸ் நோட்புக் மீதான 12% வரியில் இருந்து 5% ஆகவும் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடுத்தர மற்றும் குறைந்த வருமான பிரிவினருக்கு இன்றியமையாத பொருட்கள் மலிவாகக் கிடைக்கும்.
இதை தாண்டி ஆடம்பர பொருட்கள் மற்றும் Sin கூட்ஸ் என வகைப்படுத்தப்பட்டு உள்ள பொருட்கள் மீதான வரியை உயர்த்துவதோடு, அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியை குறைக்கும் ஜிஎஸ்டி சீரமைப்பு செய்யும் முயற்சிகளும் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications