டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடைபெறும் 55வது GST கவுன்சில் கூட்டத்தில் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், லைப் ஸ்டைல் பொருட்கள் என பலவற்றின் மீதான வரியை மறுசீரமைப்பு செய்யும் முடிவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் உள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில வருடங்களாக இருக்கும் மிக முக்கியமான விவாத பொருள் என்றால் அது, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்சி வரம்புக்குள் கொண்டு வருவது தான். மத்திய அரசும், மாநில அரசும் வரி வருமானத்திற்காகச் சாமானிய மக்கள் தினசரி அடிப்படையில் பயன்படுத்தும் எரிபொருள் மீது அதிகப்படியான வரியை விதித்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற பெட்ரோல், டீசலை ஜிஎஸ்சி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டாலும், மாநில அரசுகளுக்கு எரிபொருள் விற்பனை வாயிலாக அதிகப்படியான வருமானம் கிடைப்பதாலும், மத்திய அரசு ஜிஎஸ்டி வரி பங்கீட்டை மாநில அரசுகளுக்கான அளவீட்டை அதிகரிக்க மறுப்பதாலும் பெட்ரோல், டீசல் உட்பட அனைத்தும் ஜிஎஸ்டி வரி கட்டமைப்புக்கு வெளியிலேயே உள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும் திட்டத்தின் முதல் படியாக விமானத் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் விமான எரிபொருள் (ஏடிஎப்) ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படுவது குறித்த திட்டத்தை விவாதிக்கப்படவுள்ளது. டிசம்பர் 21 அன்று நடைபெறவுள்ள 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முக்கியமான திட்டம் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, விமான எரிபொருள் (ATF) மீது மதிப்புக் கூட்டு வரி (VAT) மற்றும் மத்திய கலால் வரி என இரு வரிவிதிப்பு முறை நடைமுறையில் உள்ளது. இந்த அடுக்கடுக்கான வரிவிதிப்பு முறை விமான எரிபொருளின் ஒட்டுமொத்த விலையை அதிகரிக்கிறது, இதனால் விமான நிறுவனங்களின் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, இறுதியில் அது விமான பயணிகளின் தலைில் விமான கட்டணமாக விழுகிறது.
தற்போதைய கட்டமைப்பில் இருக்கும் முக்கிய சவால் என்னவென்றால், விமான எரிபொருள் பயன்படுத்தும் எந்த நிறுவனங்களும் உள்ளீட்டு வரி விலக்கு (ITC) பெற முடியாமல் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் விமான எரிபொருள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் இல்லாதது தான்.
இன்புட் டாக்ஸ் கிரெடிட் மூலம் கிடைக்கும் எவ்விதமான பலன்களும் விமான எரிபொருள் வாங்கும் விமான நிறுவனங்களால் பெற முடியவில்லை. இதனால் விமான நிறுவனங்களின் லாபத்தில் பெரும் சுமை அதிகரிக்கிறது. ஏடிஎஃபை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவதன் மூலம், அரசு வரிவிதிப்பு கட்டமைப்பை எளிமைப்படுத்தி, அடுக்கடுக்கான வரி தாக்கத்தை நீக்க முடியும். இதன் மூலம் விமான பயணம் மேலும் மலிவானதாகும்.
இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தால் பெட்ரோல், டீசல் அடுத்தகட்டமாக ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.
2025 ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு, பல மாநிலங்களுடன் நேரடியாக ஆலோசனை செய்து 16-வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ள நிலையில் இந்த மாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அரவிந்த் பனகாரியா சமர்ப்பிக்கும் வரி பகிர்வு குறித்த பரிந்துரைகள் 2026-27 நிதியாண்டு முதல் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications