ஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

இந்தியப் பங்குச்சந்தையும் சரி, முதலீட்டுச் சந்தையும் சரி தொடர்ந்து மோசமான தன்மையிலேயே இருப்பதால் மும்பை பங்குச்சந்தையில் நீண்ட காலமாக நிலையற்ற சூழல் நிலவுகிறது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிற்துறை வளர்ச்சியில் ஏற்பட்டு உள்ள மந்தமான சூழ்நிலை தான்.

இதன் எதிரொலியாகவே கடந்த ஒரு வார வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் டாப் 10 நிறுவனங்கள் சுமார் 64,419 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்து உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. டாப் 10 நிறுவனங்கள் மத்தியில் அதிகச் சந்தை மதிப்பீட்டை இழந்த நிறுவனம் எது தெரியுமா..? வாங்க பார்ப்போம்

டாப் 10

டாப் 10

அதிகச் சந்தை மதிப்புடைய டாப் 10 இந்திய நிறுவனங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 64,419.10 கோடி ரூபாய் அளவிலான சந்தை முதலீட்டை இழந்துள்ளது. இதில் அதிகப்படியான சந்தை முதலீட்டை இழந்த நிறுவனம் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான்.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் பின் டிசிஎஸ், ஹெச்டிஎப்சி, கோட்டாக் மஹிந்திரா, எஸ்பிஐ மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.

இதே காலகட்டத்தில் சரிவிலிருந்து தப்பித்துச் சந்தை மதிப்பீட்டில் ஹெச்டிஎப்சி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் சந்தை மதிப்பீட்டில் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

 

மற்ற நிறுவனங்கள்

மற்ற நிறுவனங்கள்

ஹெச்டிஎப்சி வங்கி 11,666.10 கோடி ரூபாயும், டிசிஎஸ், 9,155.82 கோடி ரூபாயும், ஐடிசி 5,241.22 கோடி ரூபாயும், கோட்டாக் மஹிந்திரா 1,528.55 கோடி ரூபாயும், எஸ்பிஐ வங்கி 535.48 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டில் சரிவைச் சந்தித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த வாரத்திலஸ் 36,291.90 கோடி ரூபாய் சரிந்து 9,77,600.27 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதேபோல் டிசிஎஸ், ஹெச்டிஎப்சி, கோட்டார் மஹிந்திரா, எஸ்பிஐ மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்களும் சரிந்துள்ளது.

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

வர்த்தக வளர்ச்சியில் டிசிஎஸ் நிறுவனத்தை இன்போசிஸ் முந்திய காரணத்தால், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2,050.79 கோடி ரூபாய் உயர்ந்து 3,13,769.82 கோடி ரூபாய் அளவை எட்டியுள்ளது.

டாப் 10

டாப் 10

கடந்த வாரத்தின் சந்தை மதிப்பீட்டின் மாற்றத்திற்குப் பின் டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. ரிலையன்ஸ்-ஐ தொடர்ந்து டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி. இன்போசிஸ், எஸ்பிஐ வங்கி மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்கள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+