இந்திய வங்கித் துறையில் NRI கணக்குகளுக்கும், NRI வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், தற்போது இந்திய வங்கிகளில் சேமிப்புக் கணக்கை வைத்திருக்கும் அனைத்து என்ஆர்ஐ-களும் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு என்ஆர்ஐ கணக்கில் இருக்கும் பணத்தைத் திருட முயற்சி செய்த 3 ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் உட்பட 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி சமீபத்தில் ஒரு NRI கணக்குகளில் மட்டும் அதிகப்படியான முறையற்ற பணப் பரிமாற்றம் செய்வதற்கான கோரிக்கைகள் வருவதை வங்கி நிர்வாகம் கவனித்துள்ளது. இதையடுத்து உடனடியாக ஹெச்டிஎப்சி வங்கி சைபர் கிரைமிடம் புகார் அளித்தது.
ஆன்லைன் பண மோசடி
சமீபத்தில் இந்தியாவில் அதிகளவிலான தகவல் திருட்டு, ஆன்லைன் பண மோசடி ஆகியவை நடைபெறும் காரணத்தால் ஹெச்டிஎப்சி வங்கி புகாரை முக்கியமானதாகக் கொண்டு விசாரணை மற்றும் ஆய்வை துவங்கியது.
12 பேரை கைது
இதுக்குறித்து டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆய்வு செய்த நிலையில் 3 ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் உட்பட 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி சிம் கார்டு, செக் புக்
இந்த 12 பேர் கொண்ட கும்பல் NRI கணக்குகளில் அதிகளவிலான பணம் இருப்பதைத் தெரிந்துகொண்டு, ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் வாயிலாக இக்கணக்கில் KYC படிவத்தில் இருக்கும் மொபைல் எண்ணிக்கிற்குப் போலி சிம் கார்டு, செக் புக் உட்பட அனைத்தையும் பெற்றுள்ளனர்.
66 முறை முயற்சி
இதன் மூலம் ஆன்லைன் வாயிலாகவும், வங்கி, ஏடிஎம் வாயிலாகவும் சுமார் 66 முறை பணத்தைத் திருட முயற்சி செய்துள்ளதை சைபர் புட்பிரின்ட் மூலம் டெல்லி சைபர் கிரைம் அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
கொள்ளையில் பங்கு
மேலும் இந்த 12 பேர் கொண்ட கும்பலை விசாரணை செய்ததில் கொள்கை கும்பல் 3 ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் உதவி செய்வதன் மூலம் கொள்ளையடிக்கப்படும் பணத்தில் 50 சதவீதத்தைக் கொடுக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்ட காரணத்தால் வங்கி ஊழியர்கள் இந்தச் செக்புக் பெற உதவி செய்துள்ளனர்.
மொபைல் எண்
மேலும் 3 ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் வாயிலாக இந்த என்ஆர்ஐ கணக்கின் அமெரிக்க மொபைல் எண்-ஐ இந்திய எண்ணாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் இக்கணக்கின் உரிமையாளருக்குத் தெரியாமலேயே பணத்தைத் திருட முடியும். ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications