இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக இருக்கும் இந்திய ரயில்வே வாயிலாக தினமும் பல லட்சம் பேர் பயணித்து வருகின்றனர். விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இப்படியிருக்கும் வேளையில் ரயில்வே பயணத்தின் போது பயணிகள் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால் ட்விட்டரைப் பயன்படுத்தி புகார் அளிக்கும் வழக்கம் தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த புகார்களை ரயில்வே துறை உடனுக்குடன் டிவிட்டர் வாயிலாகவே சரி செய்ய முயற்சி செய்கிறது. இதன் மூலம் ரயில்வே துறையின் ட்விட்டர் ஹேண்டில் மிகவும் சக்திவாய்ந்த தளமாக மக்கள் நம்புகின்றனர்.

இதே நம்பிக்கையில் ரயிலில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர், ரயிலில் உணவு ஆர்டர் செய்த பின்பு தான் பெற்ற பில்-ஐ பார்த்து அதிர்ச்சி அடைந்து, இதற்து தீர்வு காண வேண்டும் என்பதற்காக டிவிட்டருக்கு வந்துள்ளார். இவருடைய பதிவு பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
சங்கேத் ஷெல்கே என்பவர் டிவிட்டரில் தான் வாங்கிய உணவுக்கு 66 சதவீதம் ஜிஎஸ்டி போடப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஜிஎஸ்டி என்பது அனைத்து சேவை மற்றும் சரக்குகளுக்கும் பொருந்தும் (0 சதவீத வரி உட்பட) ஆனால் உணவுக்கு 66 சதவீதம் வரி என்பது யாரும் அறியப்படாத ஒன்று.
இந்த நிலையில் ஐஆர்சிடிசி புட் சிஸ்டம் உருவாக்கிய பில்-ன் போட்டோ உடன் சங்கேத் ஷெல்கே ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அவர் சாப்பிட்ட உணவின் ஆரம்ப விலையான ரூ.1025க்கு கூடுதலாக ஜிஎஸ்டியாக ரூ.660 வசூலிக்கப்பட்டுள்ளதாக இவர் புகார் தெரிவித்தார். தனது பதிவில் ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ கணக்குகளை மட்டும் அல்லாமல் ரயில்வே துறை அமைச்சர், பியூஷ் கோயல், நரேந்திர மோடி, ஜெய் சங்கர் என பலரை டேக் செய்துள்ளார்.

சங்கேத் ஷெல்கே தனது ரயில் பயணத்தில் வெஜ் சாப்பாடு மற்றும் மட்டர் பன்னீர் ஆர்டர் செய்துள்ளார், பில் விபரங்கள் படி இந்த சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. மேலும் பில்லில் ஜிஎஸ்டி நம்பர், பில் நம்பர் என அனைத்து விபரங்களும் உள்ளது.
சங்கேத் ஷெல்கே பதிவிட்ட அடுத்த சில மணிநேரத்தில் ரயில்வேசேவா அமைப்பு டிவிட்டரில் அவரை தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்துள்ளது.
இதேபோல் ரயில் பயணத்திலும், ரயில் நிலையத்திலும் பில் இல்லாமல் பல பொருட்கள் அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து மக்கள் சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து புலம்பி வந்தாலும், இது தொடர்பான நடவடிக்கைகள் சில இடங்களில் எடுக்கப்பட்டாலும் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications