Samvat 2081ல் தங்கம் விலை எப்படி இருக்கும்? தங்க விலையை நிர்ணயம் செய்யும் 7 முக்கிய விஷயங்கள்!

எந்த ஒரு பண்டிகை வந்தாலும் சரி நம் நாட்டில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும். அதேபோல இந்த தீபாவளி பண்டிகைக்கும் தங்கத்திற்கான தேவை அதிகரித்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், தங்கம் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் நகைகள், தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் என தங்களுக்கு முடிந்த எடையிலான தங்கத்தை வாங்குகின்றனர்.

ஆனால் தங்கம் விலை சமீப காலமாக தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 65 ரூபாய் அதிகரித்து 7,440 ரூபாயை எட்டியுள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 71 ரூபாய் அதிகரித்து 8,116 ரூபாயாக உள்ளது.

Samvat 2081ல் தங்கம் விலை எப்படி இருக்கும்? தங்க விலையை நிர்ணயம் செய்யும் 7 முக்கிய விஷயங்கள்!

பொதுவாக தங்கம் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசு வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார மந்த நிலை, டிமாண்ட் போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்க விலையை பாதிக்கும் 7 காரணிகள் குறித்து ரெலிகேர் ப்ரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புவிசார் அரசியல் பதற்றங்கள்: தொடர்ந்து நீடிக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலக அளவில் நிதி நிலைக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ்போர் போன்ற சில முக்கிய புவிசார் அரசியல் மோதல்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியை கடுமையாக சீர்குலைத்துள்ளது. மேலும் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பிரச்சனையும் இன்னொரு சவாலாக கூறப்படுகிறது.

இதுபோன்ற உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைக்கு மத்தியில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது. இதுவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம்.

ரூபாய் மதிப்பிழப்பு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84 ரூபாயை தாண்டி உள்ளது மற்றும் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருகிறது. அக்டோபர் மாதம் 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய ரூபாயின் மதிப்பு 0.3 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தோராயமாக 1 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய வங்கியின் வாங்கும் திறன் அதிகரிப்பு: தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் உள்ளூர் சொத்துக்களின் குறைவான செயல் திறன் காரணமாக தங்கம் பாதுகாப்பான முதலீடாக மாறி இருக்கிறது. வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் அறிக்கையின் படி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய தங்க இருப்பு 290 மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது. அதேபோல மத்திய வங்கிகளின் நிகர தங்க கொள்முதல் 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 483 டன்களை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனையை படைத்துள்ளது.

பணவீக்கம்: அமெரிக்க பணவீக்கம் தொடர்ந்து 6-வது மாதமாக குறைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 2.4 சதவீதத்தை எட்டியது. 2021-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இதுவே மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும்.

பெடரல் ரிசர்வ் 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக முக்கிய வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து தீவிரமான அணுகுமுறையை கையில் எடுத்தது. பணவீக்கம் குறைந்த போதிலும், CPI விகிதம் அமெரிக்க பெடரலின் 2% இலக்கை விட அதிகமாக தான் உள்ளது. இதனால், பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பாக கருதப்படும் தங்கம் உலக சந்தைகளில் தொடர்ந்து தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டுத் தேவை: தங்கம் விலையை பாதிக்கும் மற்ற முக்கிய காரணிகளில் ஒன்று, முதலீட்டு தேவையாகும். 2024-ஆம் ஆண்டின், 2-வது காலாண்டில் கோல்ட் பார், கோல்டு காயின்கள் மற்றும் ETF-களுக்கான தேவை 254 டன்களாக நிலையாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதலீட்டு தேவை 5 சதவீத சரிவை கண்டுள்ளது. இருப்பினும் கோல்ட் பார் முதலீடுகள் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிஸிக்கல் கோல்டுகான தேவை: மத்திய வங்கிகளின் அதிகரித்த கொள்முதல் காரணமாக தங்கத்திற்கான தேவை 2024-ஆம் ஆண்டில் அதிகரித்தது. OTC முதலீடு உட்பட தங்கத்தின் தேவை 2-வது காலாண்டில் 4 சதவீதம் அதிகரித்து 1658 டன்களை எட்டியது.

டாலர் இன்டெக்ஸ் மற்றும் வட்டி விகிதங்கள்: உலகளாவிய வட்டி விகித குறைப்பு மற்றும் தங்க விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. வட்டி விகிதங்கள் குறையும்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களை பொறுத்துதான் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+