இந்திய வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் முகேஷ் அம்பானி, குமார் மங்களம் பிர்லா போன்ற கோடீஸ்வர தொழிலதிபர்கள் தங்களது வர்த்தகத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்ற தொடங்கி விட்டனர். இது அவர்களின் வர்த்தகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இளம் தலைமுறையினர் தனித்துவமான ஐடியாக்கள் மற்றும் திறன்களால் வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கின்றனர். அந்த வகையில், இந்திய பணக்கார குடும்பங்களில் இருந்து வளர்ந்து வரும் தொழில் அதிபர்கள் மற்றும் தங்கள் துறையில் ஆதிக்கம் செலுத்தும் 7 வாரிசுகளை பார்ப்போம்.

அனன்யா பிர்லா : ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லாவின் மூத்த மகள் அனன்யா பிர்லா. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தில் பட்டம் பெற்ற இவர், தந்தையின் வணிக பாதையில் செல்ல விரும்பவில்லை. இவருக்கு இசை மீது அதிக ஆர்வம். அதனால் படிப்பு முடிந்து இந்தியா வந்தவுடன் இசையில் கவனம் செலுத்தினார்.
மேலும் இ.பி. மற்றும் பல சிங்கிள்களை வெளியிட்டார். இருப்பினும் அவருக்குள் ஓடுவது வர்த்தக ரத்தம் அல்லவா, 2012ல் ஸ்வதந்த்ரா மைக்ரோபின் என்ற கிராமப்புற பெண்களுக்கு வீட்டு அடிப்படையிலான வணிகங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் இன்று பல மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இஷா அம்பானி பிரமல் : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி பிரமல். இவர் அமெரிக்காவின் பிரபலமான யேல் பல்கலைக்கழக முன்னாள் மாணவி. உளவியலில் மற்றும் தெற்காசிய படிப்பில் பட்டம் பெற்றவர். படிப்பு முடிந்தவுடன் மெக்கின்சி அண்ட் கோ நிறுவனத்தில் சிறிது காலம் வேலை பார்த்தார்.
அதன் பிறகு தான் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் இயக்குனர்கள இணைந்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொழில்நுட்ப மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்களை வழிநடத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைவராக இஷா அம்பானி உள்ளார்.
அஷ்னி பியானி : பியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானியின் மகள்தான் அஷ்னி பியானி. இவர் அமெரிக்காிவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பார்சன்ஸ் ஸ்கூல் டிசைனில் டெக்ஸ்டைல் டிசைன் படித்தவர்.
தற்போது பியூச்சர் குழுமத்தின் நிர்வாக இயக்குனராக படைப்பாற்றல் மற்றும் வணிக புத்திசாலித்தனத்தின் கலவை வெளிப்படுத்துகிறார். பியூச்சர் கன்ஸ்யூமரின் தலைமைாக இருந்து இதர இந்திய பன்னாட்டு எஃப்.எம்.ஜி.சி. நிறுவனங்களுக்கு கடும் சவால் அளித்து வருகிறார்.
ஆகாஷ் அம்பானி : இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இவர் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர். படிப்பு முடிந்த பிறகு, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்றார். நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு முன்முயற்சிகளை வழிநடத்தும் தலைமை மூலோபாயராக செயல்பட்டு வருகிறார். ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீன் தொலைத்தொடர்பு வர்த்தகத்தின் (ஜியோ) தலைவராக உள்ளார்.
ரிஷாத் பிரேம்ஜி : விப்ரோவின் முன்னாள் தலைவரும், கொடுத்து கொடுத்து கைகள் சிவந்தவருமான கோடீஸ்வரர் அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி. நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் செயல் தலைவராக உள்ளார். 2007ல் விப்ரோவில் தலைமை வியூக அதிகாரியாக இணைந்தார். தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்துதல், 10 கோடி டாலர் விப்ரோ துணிகர நிதியம் நிறுவுவதல், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றை கவனித்து வருகிறார்.
ஆதார் பூனவல்லா : பிரபல தொழிலதிபர் சைரஸ் பூனவல்லாவின் மகன் ஆதார் பூனவல்லா. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவரை இந்தியாவின் தடுப்பூசி மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
இவரது தலைமையின் கீழ் நிறுவனம் தனது உலகளாவிய தடத்தை விரிவுப்படுத்தியது. மேலும் பூனவல்லா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் குறைந்த வருமானம் கொண்ட நுகர்வோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications