உலகையே உலுக்கிய என்விடியா நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான ஜென்சன் ஹுவாங் சீனா பெண் உளவாளியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டு தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் என்விடியா நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அமெரிக்க அரசுக்கு ஜென்சன் ஹுவாங்-ன் கள்ளத் தொடர்பு குறித்து ஒரு வருடத்திற்கு முன்பே தெரிந்த நிலையிலும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருப்பதும், டிரம்ப் தொடர்ந்து ஜென்சன் ஹுவாங் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதைத் தாண்டி தற்போது பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் முக்கியமான கேள்வி ஜென்சன் ஹுவாங்-ன் மனைவி லோரி ஹுவாங் தற்போது விவாகரத்து கேட்டால், ஜென்சனின் 155.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் கிட்டத்தட்டப் பாதி அவரின் மனைவிக்குச் செல்லும் என்பது தான். ஆனால் லோரி இதுவரையில் விவாகரத்து கோரவில்லை, இதேபோல் இந்த கள்ள தொடர்பு விவகாரம் குறித்துப் பேசவில்லை.
லோரி ஹுவாங் அவரது கணவன் ஜென்சன் ஹுவாங்-ஐ விட 2 வயது மூத்தவர், இருவரும் ஆர்கான் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த போது சந்தித்து காதல் வயப்பட்டு 1985ல் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுடைய திருமணத்திற்குப் பின் 8 ஆண்டுகளுக்குப் பின்பு தான் என்விடியா துவங்கப்பட்டு உள்ளது. இதேபோல் என்விடியா துவக்க காலகட்டத்தில் பல்வேறு நிர்வாக, வர்த்தக முடிவுகளில் லோரி தலையீட்டு உள்ளார், இதன் மூலம் என்விடியா-வின் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில் இவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இதேபோல் இன்றளவும் Jen-Hsun & Lori Huang Foundation அமைப்பை இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த டிரஸ்ட் அமைப்பின் கீழ் 528 மில்லியன் என்விடியா பங்குகள் உள்ளது. இவர்களுடைய பிள்ளைகளான மேடிசன் மற்றும் ஸ்பென்சர் இருவரும் தற்போது என்விடியாவில் தான் பணியாற்றி வருகிறார்கள்.
இதன் மூலம் ஆரம்பம் முதல் இன்று வரையில் என்விடியா வளர்ச்சியிலும், ஜென்சன் ஹுவாங் குடும்பத்தை நிர்வாகம் செய்வதில் லோரி மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் லோரி ஹுவாங் விவாகரத்து கோரினால் கலிபோர்னியா விதிகள் படி திருமணத்திற்கு முந்தைய அல்லது பிந்தைய ஒப்பந்தம் செய்யாத பட்சத்தில் அனைத்து சொத்துக்கள், கடன்கள், பங்குகள், பண இருப்பு ஆகிய அனைத்திலும் இருவருக்கும் சரி சமமான பங்கீடு உள்ளது.

மேலும் என்விடியாவின் ஆரம்பக்கட்டத்தில் ஜென்சன் ஹுவாங் வளர்ச்சிக்கு லோரி உறுதுணையாக இருக்கும் காரணத்தால் ஜென்சன் ஹுவாங் சொத்தில் பாதியை ஜீவனாம்சமாகக் கேட்பதற்கு உரிமை அதிகம். இதன் மூலம் லோரி ஹுவாங் 75 - 77.5 பில்லியன் டாலர் வரையிலான தொகையை ஜீவனாம்சமாகப் பெறுவார்.
அமெரிக்கத் தொழிலதிபர்கள் மத்தியில் நடந்த காஸ்ட்லியான விவாகரத்தாக இது இருக்கும். இதற்கு முன்பு அமேசான் ஜெப் பெசோஸ் - மெகன்சி ஸ்டாக் மத்தியிலான விவாகத்தில் 36 பில்லியன் டாலர் ஜீவனாம்சமாக கொடுக்கப்பட்டது. இதேபோல் பில்கேட்ஸ், மெலின்டா பிரென்ச் கேட்ஸ் மத்தியிலான விவாகத்தில் 12.5 பில்லியன் டாலர் கொடுக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
