தமிழக சட்டசபை தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட பின்பு பறக்கும் படைகள் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், சென்னை அசோக் நகர் பகுதியில் ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த விதிகளின் படி, பொதுமக்கள் யாரும் 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணம் அல்லது பொருட்களை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட முடியாது. ஆவணங்கள் மற்றும் முறையான ஆதாரம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டு தேர்தல் கண்காணிப்பின் பறக்கும் படையினர் கைப்பற்றுவார்கள்.
மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு, சாலைகளில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் தான் அசோக் நகர் பகுதியில் ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது கைப்பற்றப்பட்டது.

அசோக் நகர் சோதனை
சென்னை அசோக் நகர் 11வது அவென்யூ பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, மொத்தம் 21 வாகனங்களில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுடன் சென்றுள்ளன. இதில் 20 வாகனங்களில் இருந்த பொருட்களுக்கு தேவையான ஆவணங்கள் சரியாக இருந்தன.
ஆனால், ஒரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு எந்தவித ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த 381 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வருமான வரித்துறைக்கு ஒப்படைப்பு
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கிண்டியை சேர்ந்த ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சவுகார்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகளிடமிருந்து வாங்கப்பட்ட தங்க நகைகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
189 கோடி கோடி
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து, இதுவரை தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 189 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications