கொரோனா கொடூரத்தில் ரியல் எஸ்டேட்.. ரூ.66,000 கோடி வீடுகள் தேக்கம்..!

கொரோனா காரணமாக இந்தியாவில் பல்வேறு துறை கடுமையான வர்த்தகப் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில் ரியல் எஸ்டேட் அதிகம் பாதித்த துறையாக உருவெடுத்துள்ளது.

மக்கள் ஒரு பக்கம் தினசரி வாழ்க்கையை நடந்தவே போராடும் இந்த நிலையில், மறுபக்கம் பணிநீக்கம், வேலைவாய்ப்புக் கொடுக்கப்படும் விகிதத்தில் குறைவு, புதிய வேலைவாய்ப்பில் மிகப்பெரிய கேள்விக் குறி என ஒட்டுமொத்த வேலை வாய்ப்பு சந்தையும் தலைகீழாக மாறியுள்ளது. இதனால் மக்கள் வீடு வாங்கும் ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.

66,000 கோடி ரூபாய்

66,000 கோடி ரூபாய்

பொதுவாக ரியல் எஸ்டேட் துறையில் ready-to-move-in வீடுகளுக்கு மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு இருக்கும், ஆனால் இப்போது வேலைவாய்ப்பு சந்தை மோசமாக இருப்பதால் ready-to-move-in வீடுகளையே வாங்க ஆள் இல்லாமல் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவித்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக இந்தியாவில் தற்போது 78,000 ready-to-move-in வீடுகள் தயாரான நிலையில் இருந்தும் விற்பனை ஆகாமல் நிர்கதியாய் நிற்கிறது. இந்த வீடுகளில் மதிப்பு மட்டும் 65, 950 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

6.44 லட்சம் வீடுகள்

6.44 லட்சம் வீடுகள்


இந்திய நகரங்களில் சுமார் 6.44 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது விற்பனை ஆகாமல் இருக்கும் ready-to-move-in வீடுகளின் அளவு மட்டும் 12 சதவீதம். இதுமட்டும் அல்லாமல் கொரோனா பாதிப்பில் ரியல் எஸ்டேட் துறை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் ready-to-move-in வீடுகளை வாங்க மக்கள் அதிகளவிலான விலை குறைப்பை எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி அதிகளவிலான விலை குறைப்பை எதிர்பார்க்கின்றனர், இதனால் பில்டர்களும் விற்பனை செய்ய மனம் இல்லாமல் தவிக்கின்றனர்.

 

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை அதிகளவில் குறைத்துள்ள காரணத்தால் தற்போது வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 7.15 முதல் 7.80 சதவீதமாகத் தான் உள்ளது. இதையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்தாலும், பில்டர்கள் மக்கள் கேட்கும் குறைவான விலைக்கு வீடுகளை விற்பனை செய்ய மறுக்கிறது.

முக்கிய நகரங்கள்

முக்கிய நகரங்கள்

தற்போது ready-to-move-in வீடு பிரிவில் NCR பகுதியில் 15,600 வீடுகளும், பெங்களூரில் 10,100 வீடுகளும், ஹைதராபாத்தில் 2,400 வீடுகளும் விற்பனை ஆகாமல் இருக்கிறது.

விலை

விலை

மேலும் கொரோனா மற்றும் லாக்டவுன் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் வீட்டு மனை மற்றும் வீடுகளின் விலை அதிகப்படியாக 20 சதவீதம் வரையில் குறையும் என நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் சேவை வழங்கும் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் தலைவர் தீபக் பாரீக் கூறியுள்ளார்.

மேலும் அவர் மக்கள் வீடு வாங்க இதுதான் சரியான நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+