தடை அதை உடை என்று சாதித்து காட்டிய 8 பெண் இன்ஜினியர்கள்..!!

இன்று நம் வீட்டில் பெண்கள் அனைவரும் சுதந்திரமாக கல்வியை பெறுகின்றனர். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட விஷயமாக இருந்தது. இருப்பினும் அந்த காலத்திலும் சில பெண்கள் அந்த தடைகளை உடைத்து கல்வியில் சாதித்து உள்ளனர்.

குறிப்பாக பொறியியல் சாதித்த பெண் பொறியாளர்களின் வெற்றி இந்தியாவை புதுமைகள் நிறைந்த எதிர்காலத்துக்கு இட்டு சென்றது. இன்றைய பெண்களின் கல்விக்கு அன்று பாதை போட்டு கொடுத்த பெண் பொறியாளர்கள் சிலரை பார்ப்போம்.

தடை அதை உடை என்று சாதித்து காட்டிய  8 பெண் இன்ஜினியர்கள்..!!

1.அய்யாலசோமயாஜூலா லலிதா

இளம் வயதில் திருமணம் மற்றும் கணவரின் எதிர்பாராத மரணத்தால் 18 வயதில் நான்கு மாத மகளுடன் அய்யாலசோமயாஜூலா லலிதாவின் வாழ்க்கை இருண்டு போய் இருந்தது. இருப்பினும் அந்த துயரத்தில் இருந்து மீண்டும் வந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் நான்காண்டு பொறியியல் படிப்பில் சேர விரும்புவதாக தனது தந்தையிடம் அவர் தெரிவித்தார்.

அந்த கல்லூரியில் பேராசிரியராக இருந்து அவரது தந்தை மகளுக்கான அனைத்து வழிகளிலும் உதவினார். மேலும் கல்லூரியில் தனது மகள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, கல்லூரியில் சேர விரும்பும் மற்ற பெண்களுக்காக விளம்பரத்தை வெளியிட்டார். அதன் பலனாக பிகே திரேசியா மற்றும் லீலாம்மா ஜார்ஜ் கோஷி ஆகியோர் பொறியியல் படிப்பில் இணைந்தனர். இந்தியாவின் முதல் பெண் பொறியாளரானார் லலிதா.


2.பி.கே. திரேசியா

லலிதா மற்றும் லீலாம்மாவின் கல்லூரி தோழியான பி.கே. திரேசியா பொறியியல் பட்டம் பெற்ற பிறகு 1971ல் கேரள பொதுப்பணித்துறையில் முதல் பெண் தலைமை பொறியாளராக அவர் பொறுப்பேற்றார். எட்டு ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 35 புதிய பாலங்களை சாலை கட்டுமான திட்டங்களுடன் நிறுவினார்.


3.லீலாம்மா ஜார்ஜ் கோஷி

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்த முதல் 3 பெண்களில் மிகவும் பிரபலமானவர் கோஷி. பொதுப் பணி துறையில் தனது யோசனைகளால் பெரும் தாக்கத்தை உருவாக்கினார். இங்கிலாந்துக்கு சென்று நகர திட்டமிடலில் உயர்கல்வி கற்க லீலாம்மாவுக்கு திருவிதாங்கூர் மகாராணி நிதியுதவி செய்தார். உயர் கல்வியை முடித்த பிறகு அவர் இந்தியா திரும்பி திருவனந்தபுரத்தில் பணிபுரிந்தார்.


4.ராஜேஸ்வரி சாட்டர்ஜி

1992ல மைசூரில் பிறந்தவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி. இவர் தனது பாட்டியின் சிறப்பு ஆங்கில பள்ளியில் படித்தார்.பின்பு அவர் பெங்களூருவில் உள்ள மத்திய கல்லூரியில் சேர்ந்தார். அங்கு கணிதம் மற்றும் இயற்பியலில் பி.எஸ். மற்றும் எம்.எஸ்.சி. பட்டங்களை பெற்றார். அதன் பிறகு 1953ல் இந்திய அறிவியல் கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி.) சேர்ந்தார்.

எலக்ட்ரான் குழாய் சுற்றுகள் மற்றும் மைக்ரோவேவ் தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் ஆய்வு செய்தார். கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் துறையின் தலைவராக இருந்தார். ஐ.ஐ.எஸ்.சி-ல் இவர் தலைவராக இருந்த காலத்தில், மைக்ரோவே் மற்றம் ஆன்டெனா என்ஜினீயரிங் துறைகளில் புரட்சியை ஏற்படுத்தினார். முந்தைய மைசூர் மாவட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்களில் ஒருவர்


5. சகுந்தலா ஏ பகத்

சிவில் என்ஜினீயரிங் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி சகுந்தலா ஏ பகத். 1970ல் இவர் தனது கணவர் அனிருதா எஸ் பகத்துடன் இணைந்து பாலம் கட்டுமான நிறுவனமான குவாட்ரிகான் பிராண்டை அறிமுகம் செய்தனர். இந்நிறுவனம் prefabricated modular designல் நிபுணத்துவம் பெற்றது.

இதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளனர். இது 1972ல் இமாச்சல பிரதேசத்தின் ஸ்பிட்டியில் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டது. 1978க்குள் காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை 69 பாலங்களை கட்டினர். 200க்கு மேற்பட்ட குவாட்ரிகான் ஸ்டீல் பாலங்கள் இவர்கள் கட்டியதுதான்.


6. ஏ. பார்வதி மட்டன்செரில்

கேரளாவை சேர்ந்த ஏ. பார்வதி மட்டன்செரில் 1956ல் மெட்ராஸ் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அந்த கல்லூரியில் அவர் ஒருவர் மட்டுமே பெண் என்பதால், அவருக்கு ஒரு நட்பு வேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகம் ஒரு பெண் தட்டச்சரை வேலைக்கு அமர்த்தியது.

1960ல் பட்டம் பெற்ற பிறகு கல்லூரி பணியில் இணைந்தார். பார்வதியின் 34 ஆண்டு கால வாழ்க்கையில், மதுரை பெண்களுக்கான அரசு பாலிடெக்னிக், சென்னை டாக்டர் தர்மாம்பாள் மகளிர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் பெண்களுக்கான அரசு பாலிடெக்னிக் ஆகிய 3 கல்லூரிகளில் முதல்வராக பணியாற்றினார்.

7.இலா மஜூம் தார்

1947ல் பெங்கால் பொறியியல் கல்லூரிகளின் கதவுகள் பெண்களுக்காக திறக்கப்பட்டபோது, அந்த வாய்ப்பை இலா மஜூம் தார் பயன்படுத்தி கொண்டார். மருத்துவம் படிப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் மத்தியில் மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், என்ஜினீயரிங் தான் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.

800 மாணவர்கள் மத்தியில் ஒரே ஒரு பெண் என்பதால், கல்லூரி ஆண்டுகளை முதல்வர் பங்களாவின் தரைததளத்தில் உள்ள ஒரு அறை விடுதியில் தங்கி வகுப்புகளுக்கு சென்று வந்தார். 1951ல் இந்தியாவில் முதல் மெக்கானிக்கல் என்ஜினீயராக பட்டம் பெற்றார். இது எதிர்கால பெண் கல்விக்கான பெரிய விதையை விதைத்தது.

8.மேரி மேத்யூ

மலபாரை சேர்ந்தவர் மேரி மேத்யூ. இவரது தந்தை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். சுதந்திர போராட்டத்தால் இவரது இளம் பருவம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மெட்ராஸில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்றார். இதனையடுத்து மெட்ராஸ் மாநில மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக சேர்ந்தார். மாநிலத்துக்கான மின் விநியோகத்தை திட்டமிட்டுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

கோயம்புத்தூரில் பெண்களுக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மதுரையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை நிறுவியதில் இவரது பங்களிப்பு பெரியது. இவரது தலைமையில் இந்த கல்லூரிகளில் ஏராளமான புதிய படிப்புகள் தொடங்கப்பட்டு, பல பெண்களுக்கு பொறியியல் படிப்பை தொடர அதிகாரம் அளித்தன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+