சென்னை: தங்கம் விலை இந்த ஆண்டு எதிர்பார்க்காத உச்சங்களை எல்லாம் எட்டிவிட்டது. சாமானிய மக்கள் ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் கூட ஒரு லட்சம் ரூபாய் செலவிட வேண்டும் என்ற நிலைமை தற்போது உண்டாகி இருக்கிறது.
1 பவுன் ரூ.1 லட்சம்: ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து 22 கேரட் தங்கம் வாங்குவது என்பது அனைத்து குடும்பங்களுக்கும் முடியாத ஒரு காரியம். மிடில் கிளாஸ் மக்களை பொறுத்தவரை தங்கம் வாங்கும் முடிவையே கைவிட்டு விட்டார்கள் என்றே கூறலாம். இதனால் நகை விற்பனைகள் குறையும் அபாயம் உண்டான நிலையில்தான் அரசு அண்மையில் 9 கேரட் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை வழங்கி அங்கீகாரம் அளித்தது.

பண்டிகை கால நகை விற்பனை: பொதுவாக இந்தியாவில் பண்டிகை காலத்தில் தங்க நகை விற்பனை என்பது அதிகரிக்கும் . ஆனால் இந்த ஆண்டு விலை அதிகமாக இருப்பதால் நகை விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்காது என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மக்கள் தங்க நகை வாங்குவதையே விட்டு விடப் போகிறார்களோ என்ற நிலையில் தான் 9 கேரட் தங்க நகைகளுக்கு அரசு ஹால்மார்க் முத்திரை என்ற அங்கீகாரத்தை கொடுத்தது. ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது என்றால் அரசு அந்த தங்கத்தின் தூய்மை தன்மையை ஏற்று அங்கீகாரம் வழங்குகிறது என அர்த்தம்.
என்னென்ன கேரட்களுக்கு அனுமதி: இந்தியாவில் தற்போது 24 கேரட், 22 கேரட், 18 கேரட், 14 கேரட் தங்க நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் எனப்படும் பிஐஎஸ் முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 9 கேரட் நகைகளுக்கும் இந்த ஹால்மார்க் முத்திரை என்பது கிடைக்கிறது. தற்போது நாம் தற்போது சந்தையில் வாங்கக்கூடிய பெரும்பாலான ஆபரண தங்கம் 22 கேரட் தங்கம் ஆகும்.
தூய்மையானது 24 கேரட்: தங்கம் எவ்வளவு கேரட் கலந்திருக்கிறது என்பதை பொறுத்துதான் அவற்றின் விலையும் அவற்றுக்கான மதிப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நாம் பார்த்தோம் என்றால் 24 கேரட் தங்கம் என்பது தான் இருப்பதிலேயே தூய்மையான தங்கம். 24 கேரட் தங்கத்தில் நமக்கு நகைகள் கிடைப்பது கிடையாது ஆனால் பார்கள், நாணயங்கள் கிடைக்கின்றன.

ஆபரணம் 22 கேரட்: 24 கேரட் தங்கத்தில் 99.9 சதவீதம் தங்கம் தான் இருக்கும் . 22 கேரட் தங்கத்தை பொறுத்தவரை அதில் 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் பிற உலோகங்களும் கலக்கப்பட்டு இருக்கும். இதற்கு 916 என்ற ஹால்மார்க் முத்திரை இருக்கும். அடுத்ததாக 18 கேரட் தங்கத்தை பொருத்தவரை அதில் 75% தங்கம் 25% மற்ற உலோகங்கள் இருக்கும். இதில் ஹால்மார்க் முத்திரை என்பது 750 என்ற எண்ணில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
9 கேரட்டில் எவ்வளவு தங்கம்: 14 கேரட் தங்க நகையில் 58.33% தூய்மையான தங்கமும் 42.6 சதவீதம் மற்றும் உலோகங்களும் கலக்கப்பட்டு இருக்கும் இதில் 583 என்ற ஹால் குறிக்கப்பட்டிருக்கும். 9 கேரட் தங்கத்தில் 37.5% தான் தங்கம் , மீதமுள்ள 62.5% மற்ற உலோகங்கள். இதில் 375 என ஹால்மார்க் குறிப்பிடப்பட்டிருக்கும் .
பாதி கூட தங்கம் இல்லை: அதாவது 9 கேரட் தங்கத்தில் பாதி அளவு கூட தங்கம் கிடையாது என்பதுதான் உண்மை . ஆனால் இதனை நாம் குறைவான விலைக்கு வாங்கி விட முடியும் . 22 கேரட் தங்க நகை ஒரு பவுனுக்கு கிட்டத்தட்ட 84,000 நமக்கு தேவைப்படுகிறது. செய்கூலி சேதாரம் அனைத்தும் சேர்த்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை வந்துவிடும் . ஆனால் ஒன்பது கேரட் தங்க நகையாக நாம் வாங்கும் போது 30 ஆயிரம் ரூபாய் வரை இருந்தாலே நமக்கு போதும்.

குறைந்த விலைக்கு தங்கம்: அந்த வகையில் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு குறைந்த விலையில் தங்க நகைகளை வாங்கி அணிவதற்கான வாய்ப்புகளை இந்த 9 கேரட் தங்கம் என்பது ஏற்படுத்தி தருகிறது . ஏற்கனவே வெளிநாடுகளில் எல்லாம் இந்த 9 கேரட் தங்கம் என்பது பரவலாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது . ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இன்னுமும் இவற்றுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இல்லை.
பளபளவென மின்னாது: காரணம் 9 கேரட் தங்கம் 22 கேரட் தங்கத்தை போல பளபளவென மின்னாது. எனவே அதை பார்க்கும் நமக்கு ஒரு தங்க நகை போன்ற உணர்வு ஏற்படாது. அதேபோல பெரும்பாலான இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களை பொறுத்தவரை தங்கம் வாங்குவதே ஒரு அவசர தேவைக்கு அடகு வைப்பதற்காக பயன்படுத்திக் கொள்ள தான். ஆனால் இந்த 9 கேரட் தங்கத்தை பொறுத்தவரை அரசு அதற்கு ஹால்மார்க் வழங்கியிருந்தாலும் அதனை கொண்டு அதிக பணத்திற்கு அடகு வைக்க முடியாது.
இன்னும் 14 கேரட்டே எடுபடவில்லை: அதாவது நாம் வாங்கிய விலை நமக்கு கிடைத்துவிடும் இருந்தாலும் அதை அடகு வைத்து நம்மால் பெரிய அளவில் பணம் பார்க்க முடியாது. இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் இந்த 9 கேரட் தங்கம் என்பது இன்னும் எடுபடவில்லை . ஏற்கனவே 14 கேரட், 18 கேரட் தங்கத்தை கூடவே இன்னும் மக்கள் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை.
சென்னையில் வரவில்லை: சென்னையை பொறுத்தவரை இன்னும் கடைகளில் 9 கேரட் தங்க நகைகள் விற்பனைக்கு வரவில்லை. கேரட் லேன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆன்லைனில் தான் விற்பனை செய்கின்றன. இதிலும் கூட ஜென் ஸீ தலைமுறையினர் அதாவது தங்க நகை அணிய வேண்டும் நவீன டிசைன் கொண்டவைகளாக அவை இருக்க வேண்டும் என அதே போல லைட் வெயிட்டாக இருக்க வேண்டும் என எண்ணக்கூடிய இளசுகள் மத்தியில் இந்த 9 கேரட் ,14 கேரட் தங்க நகைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக நகை கடை விற்பனையாளர்கள் சொல்கின்றனர்.
22 கேரட்டிற்கு மவுசு: நாம் முன்கூட்டியே கூறியதைப் போலவே இனம் தலைமுறையினர் நவீன டிசைன்களை அணிய வேண்டும் என எண்ணுபவர்கள் மத்தியில் தான் இவற்றுக்கு வரவேற்பு இருக்கிறது தவிர 22 கேரட் தங்கத்திற்கு இருக்கக்கூடிய மவுசு இதுவரை இந்த நகைகளுக்கு வரவில்லை என்கிறார் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும் கோல்ட் குரு என அழைக்கப்படுபவருமான சாந்தகுமார்.
யாருக்கு 9 கேரட் பொருந்தும்: தங்கத்தை நான் ஒரு முதலீடாக வாங்குகிறேன் ஒரு அவசர தேவைக்கு அதனை அடகு வைத்து நான் பணமாக மாற்றி பயன்படுத்திக் கொள்வேன் எனக் கூறும் நபர்களுக்கு இந்த ஒன்பது கேரட் தங்க நகை நிச்சயம் பொருந்தாது. எனக்கு ஒரு தங்க ஆபரணம் அணிய வேண்டும் அதற்காகத்தான் நான் தங்கத்தை வாங்குகிறேன் எனக் கூறுபவர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்கும். அவர்களே கூட முதலில் 18, 14 கேரட் நகைகளுக்கு சென்றுவிட்டு அதன் பின்னர் தான் இதனை நோக்கி படை எடுப்பார்கள்.
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!



Click it and Unblock the Notifications