இந்தியாவில் தங்கம் விலை கடந்த 2 நாட்களாகக் கிராமுக்கு 100 ரூபாய்க்கு மேல் குறைந்து வந்தாலும், சாமானிய மக்கள் தங்கத்தை முன்பு போல் வாங்கும் விலையில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், சந்தையில் நகை கடை உரிமையாளர்கள் புதுப்புது உக்தியை கையாள துவங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்தியாவில் 18 கேரட் தங்க நகைகள் அதிகம் சந்தைக்கு வந்தது, குறிப்பாக வைர நகைகள் என்றால் 22 கேரட் தங்கத்திற்கு பதிலாக 18 கேரட் தங்க நகை பயன்படுத்துவது Default ஆக மாறியுள்ளது. இந்த நிலையில் தற்போது புதிதாக 9 கேரட் தங்கத்தை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை மற்றும் ஹால்மார்கிங் யுனிக் ஐடன்டிஃபிகேஷன் (HUID) எண் வழங்க வேண்டும் என இந்திய தங்க நகை சங்கம் (India Bullion & Jewellers Association - IBJA) இந்திய தர நிர்ணயக் குழுமத்தை (Bureau of Indian Standards - BIS) வலியுறுத்தியுள்ளது.
BIS அமைப்பு தற்போது 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளுக்கே ஹால்மார்க் முத்திரை மற்றும் HUID எண் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருக்கும் வேளையில், நகை கடைக்காரர்கள் மக்களுக்கு குறைந்த விலையில் தங்கம் வாங்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற ஓரே இலக்குடன் 9 கேரட் நகைக்கான ஹால்மார்க் முத்திரை மற்றும் ஹால்மார்கிங் யுனிக் ஐடன்டிஃபிகேஷன் எண் வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மும்பையில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை சந்தையான ஜவேரி பஜாரில் வெள்ளி விலை ஒரு கிலோ 1 லட்சத்தைத் தாண்டியது. இது கடந்த வெள்ளிக்கிழமை காட்டிலும் 5.67% அதிகரிப்பு.
அதேபோல், தங்கத்தின் விலையும் ரூ.75,000/- க்கு அருகில் சென்று கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.72,440 ஆக உள்ளது. பொதுத் தேர்தல் காரணமாக இந்தியாவில் தங்கம் விற்பனை மந்தமாக உள்ளது.
ஹால்மார்க் முத்திரை மற்றும் HUID எண்ணை 9 காரட் தங்கத்திற்கும் வழங்குவது குறித்து இந்திய தங்க நகை சங்கத்தின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை இந்தியத் தர நிர்ணயக் குழும அதிகாரிகளுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தற்போது, 9 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.27206 ஆக உள்ளது. இதன் மீது மேலும் 3% ஜி.எஸ்.டி. (GST) வரி விதிக்கப்படுகிறது. 9 காரட் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டால், நுகர்வோர் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு, அதிகளவிலான நகைகளை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தங்கத்தின் விலையில் மதிப்பிட ஒரு பார்மூலா உள்ளது. தங்கத்தின் விலை= (தங்கத்தின் எடை x தங்கத்தின் தூய்மை x 24 கேரட் தங்கம் விலை)/24
உதாரணமாக: 8 கிராம் 9 கேரட் தங்கத்தின் விலை = (8x9x7255)/24. அதாவது 8 கிராம் 9 கேரட் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே 24) நிலவரப்படி 21,765 ரூபாய். 9 கேரட் தங்கத்தில் 37.5% தூய்மையான தங்கம் உள்ளது.
கடந்த 5 மாதங்களில், தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 17% உயர்ந்துள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு, சீனாவில் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தடாலடியாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு மார்ச் 2024 முதல் தொடங்கியது.
அடுத்த வருடத்திற்கான ஆக்சய திருதியா பண்டிகையின் போது, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.80,000 - ரூ.85,000 வரை சென்றடையக்கூடும் என அவர் கணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications