அமெரிக்க முதலீட்டு சந்தையில் புதன்கிழமை உருவான சூறாவளி தொடர்ந்து நீடித்து வருவது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய சரிவை இழப்பை கொடுத்து முதலீட்டாளர்களை கதிகலங்க வைத்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையிலும் பெரும் சரிவு. இதனால் இந்திய முதலீட்டாளர்கள் பட்ஜெட் வருவதற்கு முன்பு இப்படியெல்லாம் நடக்குதே என புலம்ப துவங்கியுள்ளனர்.
வியாழக்கிழமை அமெரிக்க முதலீட்டு சந்தையில் வெறும் 6.சில மணி நேரத்தில் சந்தை மதிப்பு சுமார் 9 டிரில்லியன் டாலர் அளவுக்கு சரிந்து பல முதலீட்டாளர்களை துடைத்து எடுத்துள்ளது. 9 டிரில்லியன் டாலர் என்பது இந்திய ஜிடிபி மதிப்பை காட்டிலும் 2 மடங்கு, அதாவது ஒரே நாளில் 2 இந்தியாவுக்கான மதிப்பை விழுங்கியுள்ளது அமெரிக்க சந்தை. மேலும் 1 டிரில்லியன் என்பது 1 லட்சம் கோடி, அப்படியானால் நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்க சந்தையில் சுமார் 82,728 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

நேற்றைய அமெரிக்க சந்தை வர்த்தகத்தில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் மற்றும் அமெரிக்க பங்குகளில் ஏற்பட்ட கடும் ஏற்ற இறக்கமே 82,728 லட்சம் கோடி ரூபாய் இழப்புக்கு முக்கிய காரணம்.
அமெரிக்க வர்த்தக சந்தை நேரத்தில் தங்கம் விலை முதலில் 8 சதவீதம் சரிந்தது, பின்னர் வேகமாக மீண்டது. ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 5,600 டாலர் உச்சத்திலிருந்து 500 டாலர் சரிந்து 5,100 டாலராக வந்தது. இதனால் உலகளாவிய தங்கத்தின் சந்தை மதிப்பு 3.4 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.
இதேபோல் வெள்ளி விலை 11.9 சதவீதம் சரிந்தது, 121 டாலருக்கு மேல் இருந்த விலை 107 டாலராக குறைந்தது. இது ஜனவரியில் 68 சதவீதத்திற்கு மேல் உயர்ந்த வெள்ளியின் மிகப்பெரிய மாதாந்திர ஏற்றத்தை தொடர்ந்தது. இதனால் உலகளாவிய வெள்ளியின் சந்தை மதிப்பி 2 டிரில்லியன் டாலர் இழப்பை பதிவு செய்தது.
தங்கம், வெள்ளியின் சந்தை மதிப்பு மட்டும் 7 மணிநேரத்தில் சுமார் 5.4 டிரில்லியன் டாலர் சரிந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதன் வாயிலாகவே இன்று இந்திய ரீடைல் சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையும் இதே போன்ற சரிவை சந்தித்தது. S&P 500 குறியீடு 780 பில்லியன் இழந்தது, நாஸ்டாக் 2.4 சதவீதம் சரிந்து 760 பில்லியன் டாலர் இழந்தது, ஆனால் இரண்டும் வர்த்தகம் முடிவிற்கு பெருமளவு மீண்டது. மேலும் நேற்றைய வர்த்தகத்தில் மொத்த அமெரிக்க பங்கு சந்தையில் 1.15 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு 1.07 டிரில்லியன் டாலர் மீண்டது.
இந்த ஏற்ற இறக்கம் AI மற்றும் தொழில்நுட்ப பங்குகளில் ஏற்பட்ட அச்சத்தால் தொடங்கியது. டெக் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மீது முதலீட்டாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் சந்தைக்கு இது போதுமான நம்பிக்கையை கொடுக்க முடியாத காரணத்தால் ஆரக்கிள் 5.4 சதவீதமும், என்விடியா 2.7 சதவீதமும் சரிந்தன. இதனால் AI குமிழி வெடிக்கும் என்ற அச்சம் உருவெடுக்க துவங்கியது.
இந்த சந்தை அதிர்வு உலகளாவிய முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பு சொத்துகள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது புதிய மாற்றத்தை சந்தையில் கொண்டு வர உள்ளது. AI தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அச்சம் பங்கு சந்தையை பாதித்துள்ளது.
இந்திய சந்தை
இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் சென்செக்ஸ் 630 புள்ளிகளும், நிஃப்டி 200 புள்ளிகளும் சரிந்தது. MCX சந்தையில் தங்கம் விலை 2 சதவீதமும், வெள்ளி விலை 5 சதவீதமும் சரிந்தது. இதனால் இந்திய சந்தையும் ரத்தகளறியாக மாறியுள்ளது.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications