90 வயது சீன முதியவர்.. கல்யாணம் பண்ணிக்க பெண்கள் ரெடியாம்..! கடுப்பாகும் 90’s கிட்ஸ்..!

இந்தியாவில் பெரும்பாலான 90's கிட்ஸ்களுக்கே இன்னும் கல்யாணம் ஆகாத நிலையில், சீனாவைச் சேர்ந்த 90 வயது தாத்தாவை திருமணம் செய்துக்கொள்ள பெண்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடுகின்றனர்.

திருமணம் என்றாலே பயந்து ஓடும் இளைஞர்கள் மத்தியில், சில 2k கிட்ஸ் 21-23 வயதில் திருமணம் செய்வதை பார்க்கும் போது 90's கிட்ஸ் கடுப்பாவது இயல்பு தான், ஆனால் இங்கு 90 வயது முதியவரை சீன பெண்கள் திருமணம் செய்ய ஆர்வம் காட்டுவது விசித்திரமாக உள்ளது.

சீன பெண்கள் மத்தியிலான இந்த ஆர்வத்திற்கு என்ன காரணம்..?

90 வயது முதியவர் வைரல் விடியோ!

90 வயது முதியவர் வைரல் விடியோ!

சீனாவைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 90 வயது முதியவர் கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை போட்டுக்கொண்டு இருக்கும் வீடியோ சீனா முழுவதும் வைரலானது. அதில் தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில், குறிப்பாக ஜாங்ஜோவில் உள்ள ஒரு கடையில் பார்வையாளர்கள் கூட்டத்தின் முன் அந்த 90 வயது முதியவர் தனது நகைகளைக் காட்டிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பல பெண்களை அவரை திருமணம் செய்ய தயாராக உள்ளதாக கமெண்ட் செய்துள்ளனர் என சௌத் சீனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) செய்தியில் தெரிவித்துள்ளது.

தங்கம்தான் காரணமா?

தங்கம்தான் காரணமா?

இந்த வீடியோ வைரலாகி, பெண்களிடம் இந்தளவிற்கு அவருக்கு வரவேற்பு கிடைக்க தங்கம் தான் காரணம். ஏனெனில் இன்றுள்ள காலகட்டத்தில் அதிக அளவு தங்கம் வைத்திருப்பவர்களே சமூகத்தில் பெரிய பணக்காரர்களாக கருதப்படுகின்றனர்.

தங்கம்

தங்கம்

தங்கம் என்பது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெண்களின் முக்கிய கௌரவப் பொருளாகவே கருதப்படுகிறது. பெண்கள் மட்டுமின்றி வசதி படைத்த ஆண்களும் தங்க நகைகளை அணிந்து கொள்வதை பெருமையாகக் கருதுகின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் மறைந்த இசையமைப்பாளர் பப்பி லஹிரி.

 சீன முதியவரின் தங்க நகை கலெக்சன்கள்!

சீன முதியவரின் தங்க நகை கலெக்சன்கள்!

தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில், குறிப்பாக ஜாங்ஜோவில் 90 வயது முதியவர் தனது நகைகளைக் காட்டிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த முதியவர் இரண்டு கனமான தங்க வளையல்கள், ஒரு தங்க முலாம் பூசப்பட்ட வளையல், இடது கையில் வேலைப்பாடுடன் கூடிய தங்க மோதிரத்துடன் விளையாடுவது, சுமார் 2 கிலோ எடையுள்ள வளையல்களை அவரின் கையிலிருந்து அசால்ட்டாக அவர் அகற்றியுள்ளார்.

 தங்க பெல்ட்

தங்க பெல்ட்

மேலும் அவரிடம் தங்கத்தாலான பெல்ட் இருப்பதாகவும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அதை வெளியே அணிந்து செல்ல அனுமதிக்காததால் அதை விட்டுவிட்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த வீடியோவில் இந்த முதியவர் 90 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 பெண்களிடமிருந்து குவியும் கல்யாண அழைப்புகள்!

பெண்களிடமிருந்து குவியும் கல்யாண அழைப்புகள்!

இந்த வீடியோ வெளியாகி வைரலான உடனே சீனாவில் உள்ள பெண்கள் அவரை யார் எனக் கேட்டும், அவரை கல்யாணம் செய்யத் தயாராக இருப்பதாகவும் பல கமெண்ட்டுகளை கூறி வருகின்றனர்.

அவர் வயதானவர் இல்லை என்றும் அவரை தன் குழந்தை என்றும் சில பெண்கள் கூறி இளைஞர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர்.

இன்னும் சிலர் உஷார் ஆக தன்னுடைய பாட்டி சிங்கிளாக தான் இருக்கிறார் என கூறுகின்றனர்.

சீன மக்களின் தங்க நகை நுகர்வு!

சீன மக்களின் தங்க நகை நுகர்வு!

2013 ஆண்டு முதலே சீனா உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சைனா டெய்லி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பத்து ஆண்டுகளில், சீன நாட்டின் விலைமதிப்பற்ற தங்க உலோகத்தின் நுகர்வு ஆண்டுதோறும் சராசரியாக 945 டன்களை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+