நாமெல்லாம் பேனாவை எவ்வளவு விலைக்கு வாங்குவோம்.. 5 ரூபாய், 10 ரூபாய்.. ஏன் 100 ரூபாய் வரையிலும் பேனா விற்பனையாகிறது. ஆனால் ஒரு பேனா உள்ளது. அதை வாங்கும் பணத்தில் 10 சொகுசு பங்களாக்களை வாங்கிவிடலாம். மேலும் வாழ்நாள் முழுவதும் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். நாம் மட்டுமல்ல.. நம்முடைய தலைமுறை அவர்களுடைய தலைமுறை வரையில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கலாம்.
நாம் பொதுவாக பயன்படுத்தும் பேனாக்களின் விலை ரூ. 10 முதல் ரூ. 100 வரை இருக்கும். இன்னும் சில பிராண்டட் பேனாக்களாக இருந்தால் 1,000 ரூபாய் வரையிலும் இருக்கலாம். ஆனால் ஒரு காஸ்ட்லி பேனா உள்ளது. அதன் விலை ரூ. 67 கோடி.

இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் டிபால்டி தயாரித்த "ஃபல்கோர் நாக்டர்னஸ்" எனும் பேனா உலகின் மிக விலை உயர்ந்த பேனாவாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த பேனா ஏன் இவ்வளவு விலைக்கு விற்பனையாகிறது என்பதை பார்ப்போம்.
புகழ்பெற்ற லக்சரி பேனா தயாரிப்பு நிறுவனம் டிபாலிட்டி. ஃபல்கோர் நாக்டர்னஸ் பேனாவை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இது ஒரு பவுண்டன் பேனாவாகும். வழக்கமான விற்பனைக்கு அல்லாமல் தனித்துவமாக இதை வடிவமைத்துள்ளனர்.
உலகிலேயே இந்த பேனா ஒன்று மட்டுமே உள்ளது. இதற்கு இணையான இன்னொரு பேனா கிடையாது என்றே சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த பேனா முழுக்க முழுக்க வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. வைரங்கள் மட்டுமே இதன் விலைக்கு காரணம் அல்ல. இந்த பேனாவின் பின்னணியில் சில பொறியியல் மற்றும் கணித விதிகளும் அடங்கியுள்ளன.
அதாவது இந்த பேனா லியோனார்டோ டா வின்சி போன்ற மாபெரும் கலைஞர்கள் தங்கள் ஓவியங்களில் பயன்படுத்திய கணித விகிதத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது பேனாவின் மூடியின் நீளத்திற்கும் பேனாவின் மற்ற பகுதியின் நீளத்திற்கும் இடையிலான விகிதம் 1.618 என்ற அளவில் இருக்கிறது. இதுவே இந்தப் பேனா இவ்வளவு விலை போவதற்கு காரணமாக அமைகிறது.
மேலும் இதில் 945 அரிய கருப்பு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. லத்தீன் மொழியில் ஃபல்கோர் நாக்டர்னஸ் என்றால் இரவு ஒளி என்பது பொருள். அதற்கு ஏற்ப இந்த பேனாவை இரவு நேரங்களில் வெளியில் கொண்டு சென்றால் அப்படி ஒளிருமாம். 945 வைரங்கள் மட்டுமல்ல 123 மாணிக்கக் கற்களும் இந்த பேனாவில் பதிக்கப்பட்டுள்ளன. இத்துடன் 18 கேரட் தங்கம் மற்றும் மேற்பரப்பில் ருத்தேனியம் என்ற உலோகமும் பூசப்பட்டுள்ளது.
ரூ. 67 கோடிக்கு ஏலம் போன பேனா: 2010-ஆம் ஆண்டில் சீனாவின் ஷாங்காய் நகரில் ஒரு ஏல நிறுவனம் இந்த பேனாவை காட்சிக்கு வைத்திருந்தது. அப்போது உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அந்நிறுவனத்தின் ஏலத்தில் கலந்து கொண்டனர். இறுதியில் ஒரு நபர் இதனை 8 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கினார். அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 67 கோடி ரூபாய்.


Click it and Unblock the Notifications
