வெறும் 6 நாட்களில் ரூ.46,000 குறைந்த தங்கம்! வரி உயர்விலும் இப்படியா? இன்ப அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!

இறக்குமதி வரி அதிகரித்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தானே செய்யும். ஆனால் அதற்கு நேர்மாறாக தங்கம் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது. ஜூன் 6-ம் தேதியான இன்றைய தினம், தொடர்ந்து 3-வது நாளாக விலை குறைந்திருக்கிறது. உலகளவில் ஏற்படும் மாற்றங்களைப் பொருத்தும் தங்கத்தின் விலை மாறக்கூடும். இன்றைய தினம் தங்க விலை கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது.

ஜூன் 6-ஆம் தேதியான இன்று, 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.305 குறைந்து ரூ. 15,491-ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 230 குறைந்து ரூ.14,200 ஆகவும் உள்ளது. மே 31-ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை உயரவே இல்லை. ஒரு சில தினங்களில் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. ஒரு சில தினங்களில் கடும் சரிவும் தென்பட்டது. அந்த வகையில் ஜூன் 1-ஆம் தேதி அன்று கிராமுக்கு 122 ரூபாய் குறைந்திருந்தது. இன்று அதைத் தாண்டி கிராமுக்கு 305 ரூபாய் குறைந்திருக்கிறது. ஜூன் 1 முதல் 24 கேரட் தங்கத்தின் விலை 100 கிராமுக்கு ரூ. 46,800 வரை சரிந்துள்ளது.

இன்று ஒரு நாளில் 1 பவுன் 24 கேரட் தங்கம் ரூ. 2,440 சரிந்து ரூ.1,23,928-க்கு விற்பனையாகிறது. 1 பவுன் 22 கேரட் தங்கம் ரூ.1840 சரிந்து ரூ. 1,13,600-க்கு விற்கப்படுகிறது.100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 30,500 சரிந்து ரூ.15,49,100-க்கும், 100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 23,000 சரிந்து ரூ.14,20,000-க்கும் விற்பனையாகிறது.

வெறும் 6 நாட்களில் ரூ.46,000 குறைந்த தங்கம்! இன்ப அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!

தங்கத்தின் விலை குறைந்ததற்கு அமெரிக்காவில் நடந்த ஒரு சில மாற்றங்களே காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் தற்போது வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. இது அங்கு பொருளாதாரம் நன்றாக இருப்பதை காண்பிக்கிறது. அதோடு அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களில் எந்த மாற்றம் செய்யவில்லை.

பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும் போது வட்டி விகிதத்தை அந்ததந்த நாட்டின் மத்திய வங்கி குறைக்கும். ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படாமல் அதிகபட்ச வட்டி வழங்கப்படுவதால், முதலீட்டாளர்களின் பார்வை அதிக வட்டி விகிதங்களை வழங்கும் முதலீட்டு திட்டங்களையும், அமெரிக்க அரசு பத்திரங்களையும் நோக்கி பாய்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

தங்கம் என்பது பாதுகாப்பான முதலீடு என்பது உண்மைதான். ஆனால் அதை கையில் வைத்திருக்கும் போது அதற்கு வட்டியோ அல்லது லாபமோ கிடைக்காது. அதுவே அமெரிக்க அரசு பத்திரங்களில் அப்படி இல்லை நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு வட்டி வருமானம் வழங்கப்படும்.

வெள்ளி விலை நிலவரம்: ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து வெள்ளி விலையிலும் அவ்வளவாக மாற்றம் ஒன்றும் இல்லை. ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூன் 3-ஆம் தேதி வரை ஒரே விலையில் விற்பனையானது. அதன் பிறகு மூன்று நாட்களாக விலை சரிவை சந்தித்து வருகிறது. இன்று வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 270 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,70,000-ஆக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+