டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் இந்திய மக்களுக்கு தீபாவளி பண்டிகையின் போது மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என தெரிவித்தார். பரிசு என அவர் குறிப்பிட்டது ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை தான். இந்தியாவில் பல்வேறு மறைமுகமான வரிகள் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே நடைமுறையை கொண்டு வரும் விதமாக ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
ஜிஎஸ்டி வரி: 2017ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் இருக்கிறது. தற்போது பல்வேறு சேவைகளுக்கும் பொருட்களுக்கும் 5 %, 12 %, 18 % மற்றும் மற்றும் 28% என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த ஜிஎஸ்டி வரிமுறைதான் விரைவில் பெரிய அளவில் மாற்றம் காண இருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பை எளிமையாக்க வேண்டும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என நீண்ட காலமாக மக்களும் தொழில் புரிபவர்களும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

மோடி அறிவிப்பு: இந்த சூழலில் தான் மிகப்பெரிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதை பிரதமர் நரேந்திர மோடியே தன்னுடைய சுதந்திர தின உரையில் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து நிதித்திறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் அமைச்சர்கள் குழுவுக்கு கட்டமைப்பில் சீர்த்திருத்தம், வரி விகித மாற்றம், எளிமைப்படுத்துதல் ஆகிய மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜிஎஸ்டி முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டுமென பரிந்துரையை அனுப்பியிருப்பதாக குறிப்பிடுகிறது.
நிதி அமைச்சகம் பரிந்துரை: எதிர் வரக்கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் அமைச்சர்கள் குழுவிலும் இந்த வரி சீர்திருத்தங்கள் குறித்து முக்கியமான ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள பரிந்துரையின் முக்கிய அம்சங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

விலை குறைப்பு: இந்தியாவில் தற்போது மக்களிடையே நுகர்வு போக்கை அதிகரிக்க வேண்டும் என்றால் பல்வேறு பொருட்களின் விலை குறைய வேண்டும். எனவே சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரியை பரவலாக குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைந்தால் குறிப்பிட்ட அந்த பொருட்களின் விலையும் குறையும். விலை குறைந்தால் நிறைய மக்கள் அவற்றை வாங்க முன் வருவார்கள் .
வரி விகிதத்தை 2ஆக குறைப்பது: இந்தியாவில் தற்போது 4 விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது குழப்பமானதாக இருக்கிறது என தொழில் புரிபவர்கள் தெரிவிக்கின்றன. இதனை எளிமையாக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். எனவே இந்த 4 வரி விகிதங்களை 2ஆக குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட், மெரிட் என்ற முறையில் விகிதங்களை மாற்றி அமைத்து சிறப்பு பொருட்கள், சேவைகளுக்கு மட்டும் அதிக வரி விதிக்க பரிந்துரை செய்துள்ளனர்.
ஜிஎஸ்டி பதிவை எளிமைப்படுத்துவது: சிறு தொழில்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்டவற்றை விரைவாகவும் எளிமையாகவும் மாற்றும் வகையில் திருத்தம் கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது கட்டமைப்பு ரீதியாகவே ஜிஎஸ்டி முறையில் மாற்றத்தை உறுதிப்படுத்துகிறது.
தொழில் கூட்டமைப்பு: இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவரான ஹர்ஷவர்தன் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜிஎஸ்டி வரிமுறையில் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்கள் வாடிக்கையாளர் மீது இருக்கக்கூடிய வரிச் சுமையை குறைக்கும், நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் புரிவதை இது மேலும் எளிமையாக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் .
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications