நொய்டா: பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருகிறோம் என பேராசை காட்டி மக்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நமது தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளதோ அந்த அளவிற்கு ஏமாற்றுபவர்களும் புதுப்புது யுக்திகளை கையாண்டு மக்களை நூதன முறைகளில் ஏமாற்றி வருகின்றனர். அப்படித்தான் நொய்டாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் 9 கோடி ரூபாயை இழந்திருக்கிறார்.

41 வயதான ரஜத் போத்ரா என்பவர் வாட்ஸ் அப் குழு ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த வாட்ஸ் அப் குழுவில் தினந்தோறும் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான குறிப்புகளும் யோசனைகளும் பகிரப்பட்டுள்ளன.
அந்த வாட்ஸ் அப் குழுவில் அவர்கள் பரிந்துரைக்கும் பங்குகளை வாங்குமாறு குழுவில் சேர்த்தவர்கள் கூறியுள்ளனர். அந்த வாட்ஸ் அப் குழுவில் தினந்தோறும் பங்குச்சந்தை குறித்த விவரங்கள் பதிவிடப்படும். அது மட்டுமின்றி இன்று எந்த பங்கினை வாங்கலாம் எந்த பங்கினை விற்கலாம் என்பன போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை பார்த்த அவர் முதலில் தன்னிச்சையாகவே அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளார் . அந்தக் குழுவில் அவர்கள் உறுதி அளித்ததை போலவே இந்த பங்குகள் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளன.
இதனால் நம்பிக்கை பெற்ற போத்ரா அவர்களை நாடியுள்ளார். அந்த மோசடியாளர்கள் இவரிடம் ஒரு செயலியை பகிர்ந்துள்ளனர். இந்த செயலி வாயிலாக அவர்கள் சொல்லும் நிறுவன பங்குகளை வாங்க வேண்டும் என்றும், இவ்வாறு வாங்கும் போது அவருக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு போத்ரா அவர்கள் கூறிய பங்குகளில் அவர்கள் அனுப்பிய செயலியின் வாயிலாகவே முதலீடு செய்து இருக்கிறார் . 9 கோடி ரூபாய் வரை அந்த செயலியில் முதலீடு செய்திருக்கிறார்.
ஆனால் திடீரென வாட்ஸ் அப் குழுவில் பங்குகள் பரிந்துரை செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த செயலியிலும் அவரால் லாகின் செய்ய முடியவில்லை. தன்னுடைய பணத்தை திரும்ப பெற முயன்றிருக்கிறார் ஆனால் அவரால் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சைபர் கிரைம் தளத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.
நொய்டாவில் உள்ள காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரிக்க சிறப்பு குழுவினை நியமித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுபோல இந்தியாவின் பல்வேறு இடங்களில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன என்றும் மக்கள் இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். பிளே ஸ்டோரில் இல்லாத ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யக்கூடாது. இதுபோல பங்குச்சந்தை முதலீடுகளை கண்டு ஏமாந்து விடக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications