பாலிவுட் உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் ஷில்பா ஷெட்டி. இவரும், இவருடைய கணவர் ராஜ்குந்த்ராவும் தற்போது பண மோசடி புகாரில் சிக்கி இருக்கின்றனர்.
ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குனர்களாக செயல்பட்டு வந்தனர். தற்போது இந்த பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் நிறுவனம் செயல்பாட்டில் இல்லை. திவால் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

இந்த சூழலில் ஷில்பா ஷெட்டியும் அவருடைய கணவர் ராஜ்குந்தராவும் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்தபோது தன்னிடம் 60 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்தார்கள் என தொழில் அதிபர் ஒருவர் புகார் தெரிவித்திருக்கிறார் . லோடஸ் கேபிடல் என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான தீபக் கோத்தாரிக்கு 2015 இல் ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவன் ராஜகுந்த்ராவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
அப்பொழுது பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக இவர்கள் தீபக் கோத்தாரி இடம் 75 கோடி ரூபாய் கடன் கேட்டார்களாம். ராஜேஷ் ஆர்யா என்ற ஏஜென்ட் மூலம் ஷில்பா ஷெட்டி அவருடைய கணவர் ராஜ்குந்த்ரா ஆகியோர் தீபக் கோத்தாரியிடம் 12 சதவீத வட்டிக்கு முதலில் கடன் கேட்டார்களாம்.
பின்னர் வட்டியை தவிர்ப்பதற்காக அந்த கடனை முதலீடு இன மாற்றி பதிவு செய்துள்ளனர். இதற்கு மாற்றாக தீபக் கோத்தாரிக்கு மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை வருமானமாக வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருக்கின்றனர். மேலும் சரியான நேரத்தில் பணத்தை திரும்ப வழங்குவதாக கூறியிருக்கின்றனர்.
இதனை நம்பிய அவர் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தவணையாக 31.95 கோடி ரூபாய் பின்னர் இரண்டாவது தவணையாக 28.54 கோடி கொடுத்திருக்கிறார். இந்த சூழலில் 2016 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்திருக்கிறார் . தற்போது அந்த நிறுவனத்திற்கு எதிராக 1.28 கோடி ரூபாய் திவால் வழக்கு நடைபெற்று வருகிறது.
ஷில்பா ஷெட்டி தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப வழங்கவில்லை தனக்கு மாதந்தோறும் வழங்குவதாக கூறிய வருமானத்தையும் இதுவரை வழங்கவில்லை தான் நிறுவனத்திலிருந்து வெளியேறியதையோ நிறுவனம் திவாலுக்கு சென்றதையோ என்னிடம் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டியிருக்கும் கோத்தாரி மும்பையின் ஜூஹூ காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்த வழக்கு தற்போது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவர் ராஜ்குந்த்ரா மீது மோசடி வழக்கினை காவல்துறையினர் பதிவு செய்திருக்கின்றனர். இதனிடையே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications