Digital arrest scam: இதென்னடா புது பிரச்சனையா இருக்கு.. மக்களே உஷார்..!

குஜராத்: டிஜிட்டல் மோசடியாளர்கள் காவல்துறையினர் போல காட்டிக் கொண்டு எப்படி மக்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள் என்பது குறித்து குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு செய்தியாளர் தன்னுடைய சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த புலனாய்வு செய்தியாளர் விஜய் கஜேரா . இவருக்கு கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு புதிய எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மோசடியாளர்களின் அழைப்பு என்பதை அவர்களின் பேச்சின் மூலமே உணர்ந்து கொண்ட விஜய் கஜேரா தன்னுடைய தொடர்பை துண்டிக்காமல் அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை கண்காணித்துள்ளார்.

 Digital arrest scam: இதென்னடா புது பிரச்சனையா இருக்கு.. மக்களே உஷார்..!

முதலில் அவருக்கு வந்த அழைப்பில் உங்களுடைய மொபைல் எண் அடுத்த சில மணி நேரங்களில் பிளாக் செய்யப்பட்டு விடும் என்று கூறினார்களாம். டிராய் அமைப்பிலிருந்து அழைப்பதாக கூறி இந்த தகவலை தெரிவித்தார்களாம்.

அடுத்த பன்னிரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் லக்னோ காவல் நிலையத்திற்கு வந்து ஆஜராக வேண்டும் இல்லை எனில் நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதை வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வழியாக அறிக்கையாக வழங்க வேண்டும் எனக் கூறினார்களாம்.

அவர்களின் பேச்சைக் கேட்டு அஞ்சுவதைப் போல நடித்துள்ள கஜேரா வாட்ஸ் அப்பில் வீடியோ கால் செய்தாராம். அப்பொழுது எதிர் தரப்பில் ஒரு நபர் காவல் துறையினரை போல உடையணிந்து அமர்ந்திருந்தார். பின்னணியில் காவல் நிலையம் போன்ற செட்டப் செய்யப்பட்டுள்ளது.

மோசடியாளர்கள் தாங்கள் ஒரு உண்மையான காவல்துறையினர் என்பதை நிரூபிப்பதற்காக இந்த அளவில் செட்டப் செய்து வைத்துள்ளனர் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த போலி காவல்துறை அதிகாரி இவரிடம் உங்களுடைய ஆதார் மற்றும் தொலைபேசி எண்கள் தவறான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இந்த எண்ணின் உரிமையாளர் மீது புகார் வழங்கப்பட்டுள்ளது . எனவே உங்கள் மீது நாங்கள் புகார் பதிவு செய்யப் போகிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்த அறையில் நீங்கள் மட்டுமே தனியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி அந்த அறை முழுவதும் கேமராவை கொண்டு காட்ட சொன்னார்களாம். மேலும் கஜேரா மீது 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி ஒரு போலியான ஆவணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் ட்ராய் மற்றும் உச்சநீதிமன்றத்தின் பெயரில் போலியான சீல்கள் வைக்கப்பட்டிருந்ததாம். பின்னர் லக்னோ காவல் நிலையத்திற்கு போன் செய்வதை போல நடித்து கஜேராவை கைது செய்யும் படி உத்தரவிடுவதைப் போல நடித்துள்ளனர்.

பின்னர் உங்களிடம் எத்தனை வங்கி கணக்கு இருக்கிறது அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரங்களை எல்லாம் கேட்டுள்ளனர். உங்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நான் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடுங்கள் நாங்கள் காவல்துறையினர் தரப்பில் விசாரணையை முடித்துவிட்டு பின்னர் உங்களுக்கு அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுவோம் என கூறினார்களாம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரங்களுக்கு இது நடைபெற்றது. இதனை டிஜிட்டல் அரெஸ்ட் என குறிப்பிட்டுள்ள கஜேரா, தன்னை நகர விடாமல் யாரிடமும் பேச முடியாமல் வைத்திருந்தனர் என்கிறார்.

உங்களுக்கும் இதுபோல உங்கள் மொபைல் எண் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது உங்களது பெயரில் புகார் வந்துள்ளது , வாட்ஸ் அப் கால் வழியாக போலீஸ் போன்ற உடை அணிந்து யாரேனும் பேசினால் அதனை நம்பி உங்களுடைய பணத்தை ஏமாந்து விடாதீர்கள் என கஜேரா கேட்டுக் கொண்டுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+