பெய்ஜிங், சீனா: சீனா நாட்டில் திருமணம் செய்து இரண்டு மாதங்களிலேயே விவாகரத்து செய்து பணம் சம்பாதிக்கும் மோசடி அதிகரித்து வருகிறது.சீனாவில் தற்போது திருமணம் நடைபெறும் விகிதங்கள் பெருமளவில் குறைந்து விட்டதாக அந்நாட்டு அரசு வெளியிடும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு சீன இளைஞர்கள் போதிய வருமானம் இல்லாமல் இருப்பது, வாழ்க்கை செலவுகள் உயர்ந்தது, செட்டிலாகிவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என நினைப்பது ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.

இதனிடையே சில மோசடி கும்பல்களை சேர்ந்தவர்கள் இவ்வாறு இளைஞர்களுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து தருவதாக போலியாக இணையதளங்களை உருவாக்கி அதன் மூலம் இவர்கள் ஏற்பாடு செய்த பெண்களையே திருமணம் செய்து வைத்து விரைவில் அவர்களை விவாகரத்தும் செய்ய வைத்து மோசடி செய்கிறார்களாம். அந்த விவாகரத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை பிரித்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது.
அண்மைக்காலமாகவே சீனாவில் இத்தகைய மோசடிகள் அதிகரித்து வருகிறது என சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு நடக்கும் திருமணங்களை அந்நாட்டில் "flash marriages" என அழைக்கிறார்களாம். இதன்படி சீனாவின் குய்யாங்கு பகுதியில் மட்டும் 180 புகார்கள் வந்திருக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட மணமகன்கள் பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருப்பதாக கூறுகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட இணையதளமானது திருமண வயதில் இருக்கும் வரன் தேடும் இளைஞர்களை அணுகி அவர்களுக்கு வரன் பார்த்து தருவதாக உறுதியளிப்பார்களாம். இதனை அடுத்து இவர்களே ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து அந்த குறிப்பிட்ட நபருக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பார்களாம்.
பின்னர் இந்த பெண்கள் அந்த ஆண்களை மன அழுத்தத்திற்கு உண்டாக்கி அடிக்கடி சண்டை போட்டு திருமணம் ஆன இரண்டு மூன்று மாதங்களில் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்ய வைத்து விடுவார்களாம்.
இந்த விவாகரத்தில் அந்த பெண்களுக்கு குறிப்பிட்ட பணம் செட்டில்மெண்டாக கிடைக்குமாம் அதனை அவர்களும் அந்த ஏஜெண்டுகளும் பிரித்து கொள்கின்றனர். இப்படி ஒரு மோசடி சீனாவை தற்போது ஆட்டிப்படைத்து வருகிறது. இவ்வாறு திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெறும் பெண்களுக்கு இத்தகைய இணையதளங்கள் 3 லட்சம் யுவான்களை பரிசாக வழங்குகின்றனவாம். ஓர் ஆண்டில் இவர்கள் இவ்வாறு 40 முதல் 50 திருமணங்களை மேற்கொண்டு மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே பொருளாதார ரீதியாக திருமணத்தை தள்ளி போடும் இளைஞர்களுக்கு இத்தகைய மோசடிகள் திருமணத்தின் மீதான நம்பிக்கையையே இழக்க செய்கின்றன என புலம்புகிறார்கள்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications