சென்னை: தற்போது பலரும் வேலை மற்றும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும், சொத்துக்களை உருவாக்க வேண்டும், தொழிலில் முன்னேற வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு தங்களை தாங்களே பல மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கி கொள்கின்றனர். இவ்வாறு மன அழுத்தங்களில் இருப்பவர்கள் முறையாக தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த தூக்கமின்மை பிரச்சனை அவர்களின் தனிப்பட்ட வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது. 2025 சர்வதேச தூக்கம் குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் Sleep divorce என்ற போக்கு தம்பதிகள் மத்தியில் அதிகரித்து வருவதாக கூறுகிறது. Sleep divorce என்றால் தம்பதிகள் ஒரே வீட்டில் இருந்தாலும் தனி தனியே உறங்குகின்றனர் என அர்த்தம்.

இந்தியாவை சேர்ந்த 70%க்கும் அதிகமான தம்பதிகள் தனித்தனியாக படுத்து உறங்குவதையே விரும்புகிறார்கள் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் பகல் முழுவதும் பல்வேறு மன அழுத்தங்களுடனும் பரபரப்புகளுடனும் இருப்பதால் அமைதியான தரமான தூக்கம் வேண்டும் என்பதற்காக தங்களுடைய துணையைப் பிரிந்து இவர்கள் உறங்குவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் 78% தம்பதிகள் இந்த ஸ்லீப் டைவர்ஸ் முறையில்தான் உறங்குகிறார்களாம், சீனாவில் இது 67 % ஆகவும் தென்கொரியாவில் 65% ஆகவும் இருக்கிறது. நாடு முழுவதும் 13 நகரங்களை சேர்ந்த 30,000 நபர்களிடம் இந்த இந்த ஆய்வறிக்கையானது நடத்தப்பட்டு இருக்கிறது. இதுவே அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் 50 சதவீத தம்பதிகள் எப்பொழுதும் சேர்ந்தே உறங்குவதாகவும், 50 சதவீத தம்பதிகள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாள் மட்டும் தனித்தனியே உறங்குகிறோம் என்றும் பதிலளித்திருக்கிறார்களாம்.
இவ்வாறு தம்பதிகள் தனித்தனியே பிரிந்து படுப்பதற்கு கணவர் குறட்டை விடுவது அல்லது சத்தமாக மூச்சு விடுவது, தங்கள் இருவரும் வெவ்வேறு சமயங்களில் தூங்க செல்வது ,படுக்கையில் படுத்து கொண்டு போன் பார்ப்பது உள்ளிட்டவற்றை காரணமாக கூறுகிறார்கள். தனித்தனியே உறங்குவதன் மூலம் தங்களுடைய தங்கள் தூக்கத்தின் தரம் உயர்ந்திருப்பதாக தம்பதிகள் கூறுகிறார்கள்.
இருந்தாலும் நிபுணர்கள் இவ்வாறு தம்பதிகள் தனித்தனியே படுத்து உறங்குவது அவர்களின் உறவுமுறைக்கு நல்லதல்ல என கூறுகின்றனர். தம்பதிகள் சேர்ந்து உறங்கும் பொழுது அவர்களுக்கிடையே லவ் ஹார்மோனான oxytocin என்பது சுரக்கும். நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, பதற்றம் , கவலை உள்ளிட்டவற்றை குறைக்கும் தன்மை கொண்டது என கூறுகின்றனர். இது வாழ்நாளை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
எப்பொழுதுமே சேர்ந்து உறங்குகிறோம் எனக் கூறிய தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இவ்வாறு தங்களுடைய பார்ட்னரோடு சேர்ந்து உறங்கும்போது தங்களுடைய காதல் 53% அதிகரித்து இருப்பதாகவும் சௌகரியமாக தாங்கள் உணர்வதாகவும் , மனரீதியாக ஒரு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அவசர உலகத்தில் வேலை, குடும்பம், சமூக எதிர்பார்ப்புகள், பிள்ளைகள் வளர்ப்பு உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக பலரும் தங்களை பார்த்துக் கொள்ளாமல் தங்களுடைய தூக்கத்தை தியாகம் செய்கின்றனர் . இது பின்னாளில் பெரிய பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்தியாவில் 69% பேர் மன அழுத்தமே தங்களுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். இந்தியாவில் ஆண்களை விட பெண்களே மோசமான தூக்கத்தை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு வாரத்தில் பெண்கள் 3.83 இரவுகளே நிம்மதியாக தூங்குகிறார்கள், ஆண்கள் 4. 13 இரவுகள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications