UIDAI சொன்ன குட்நியூஸ்.. இனி ஆதார் புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை டைம் இருக்கு!

சென்னை: ஆதார் கார்டு, இந்திய குடிமக்களுக்கான ஒரு முக்கிய அடையாள ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு வங்கி சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கும், அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமான ஒன்று. எனவே, ஆதார் கார்டு தகவல்களை சரியாக வைத்திருப்பது அவசியம். சிலருக்கு பெயரில் திருத்தங்கள் இருக்கலாம். சிலருக்கு முகவரியில் திருத்தங்கள் இருக்கலாம். இது போன்ற உங்கள் ஆதார் விபரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கேடு முன்னதாக ஜுன் 14, 2024 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு தற்போது அந்த இலவச ஆதார் புதுப்பிப்புக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான புதிய காலக்கெடு என்ன?: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தின் தகவல்படி, ஆதாரை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 14, 2024 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களுடைய எந்த ஆதார் தகவல்களை வேண்டுமானாலும் இலவசமாக செப்டம்பர் 14ஆம் தேதி வரை, நீங்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

 UIDAI சொன்ன குட்நியூஸ்.. இனி ஆதார் புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை டைம் இருக்கு!

ஆதார் என்பது பயோமெட்ரிக் விவரங்கள், பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற தகவல்களின் அடிப்படையில் இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவ அடையாள எண் ஆகும். ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் முகவரி விவரங்கள் இருப்பதால், டூப்ளிகேட் ஆதார் வழங்கப்படுவதைத் தடுக்கிறது. போலி அடையாளங்களை கண்டறிய ஆதார் உதவுகிறது. இதன் மூலம் அரசு திட்டங்கள் சரியான நபர்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும்.

10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஆதார் கார்டு: உங்கள் ஆதார் கார்டு 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாமல் இருந்தால், உங்களின் தகவல்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் திருத்தம் இருந்தால் அவற்றைச் சரி செய்ய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (PoI/PoA) ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு மக்களுக்கு UIDAI அறிவுறுத்தி வருகிறது. இதன் மூலம், அரசு சேவைகள் சிறப்பாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

myAadhaar இணையதளம் வழியாக ஆதார் தகவல்களை எவ்வாறு புதுப்பிப்பது?

ஸ்டெப் 1: UIDAI-இன் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஆதார் நம்பர் மற்றும் OTP-ஐ பயன்படுத்தி உள்நுழையவும்.

ஸ்டெப் 2: உங்கள் சுயவிவரத்தில் காட்டப்பட்டுள்ள உங்கள் அடையாளம் மற்றும் முகவரி விவரங்களைச் சரிபார்க்கவும்.

ஸ்டெப் 3: தகவல்கள் சரியாக இல்லை என்றால், நீங்கள் மாற்ற வேண்டிய விவரங்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கான ஆதார ஆவணங்களை (புகைப்படம், முகவரிச் சான்று போன்றவை) பதிவேற்ற வேண்டும்.

ஸ்டெப் 4: ஒவ்வொரு ஆவணமும் 2 MB-க்கும் குறைவாகவும் JPEG, PNG அல்லது PDF வடிவிலும் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

ஸ்டெப் 5: உங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்து, 'Submit' என்பதை கிளிக் செய்து உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

தேவைப்படும் ஆவணங்கள்: ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், மார்க் சீட், எலக்ட்ரிசிட்டி பில், வாட்டர் பில், கேஸ் பில், பேங்க் பாஸ்புக் போன்ற ஆவணங்கள் இதற்கு தேவைப்படலாம்.

ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைனிலும், நீங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க முடியும் அதற்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையங்களைப் பார்வையிடலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+