செப்டம்பர் 14 தான் டெட்லைன்.. இந்த தேதிக்கு பின்னர் ஆதார் கார்டில் மாற்றம் செய்தால் கட்டணம் உறுதி!

ஆதார் கார்டு வைத்திருக்கும் நபர்கள் அதில் ஏதேனும் பிழைகள் இருந்தாலோ, அல்லது விவரங்களை மாற்றி அப்டேட் செய்ய நினைத்தாலோ, வரும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ள முடியும். இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு வழங்கப்படும் அரசாங்க ஆவணங்களில் முக்கியமான ஒன்று ஆதார் கார்டு. இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படும் கார்டாகும். ஆதார் கார்டில் உள்ள விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைக்கிறது.

அதன்படி வரும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள், நீங்கள் இலவசமாக ஆதார் தகவல்களைப் புதுப்பிக்கலாம். ஆனால் இந்த தேதிக்குப் பிறகு, எந்த ஒரு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டணம் விதிக்கப்படும்.

 செப்டம்பர் 14 தான் டெட்லைன்.. இந்த தேதிக்கு பின்னர் ஆதார் கார்டில் மாற்றம் செய்தால் கட்டணம் உறுதி!

ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016-இன் படி, தனிநபர்கள் தங்களின் ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

அதன்படி ஆதார் கார்டு விவரங்களையும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அதேபோல குழந்தைகளுக்கும் பால் ஆதார் அல்லது ப்ளூ ஆதார் என்ற ஆதார் கார்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதையும் அவர்களின் 5 முதல் 15 வயதிற்குள் புளூ ஆதார் அட்டையிலிருந்து புதுப்பிக்க வேண்டும்.

UIDAI மக்களுக்கு பயன்பெறும் வகையில் தொடர்ந்து ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க காலக்கெடுவை நீட்டித்த வண்ணம் உள்ளது. முதலில் ஆதார் கார்டு விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்காக மார்ச் 14-ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அதற்குப் பின்னர் இந்த காலக்கெடுவை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்தனர். தற்போது செப்டம்பர் 14-ஆம் தேதி வரை இலவசமாக ஆதார் புதுப்பித்துக் கொள்ள காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் விவரங்களை அப்டேட் செய்யாதவர்கள் ஆன்லைனில் இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த காலகெடுவிற்குப் பிறகு நீங்கள் எந்த ஒரு மாற்றம் செய்ய வேண்டுமானாலும் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

எந்த ஒரு அரசாங்க திட்டங்கள் ஆனாலும் சரி, கண்டிப்பாக ஆதார் கார்டு தேவைப்படுகிறது. எனவே ஆதார் கார்டில் இருக்கும் பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகிய விவரங்கள் சரியானதாக இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

சிலருக்கு பிறந்த தேதியில் மாற்றம் இருக்கலாம். அதே போல சிலருக்கு பெயரில் பிழை இருக்கலாம். இதுபோன்ற நபர்களும் இலவசமாக ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஏனெனில் நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக ஆதார் கார்டை பயன்படுத்தும் போது, அதில் உள்ள விவரங்கள் பிழையாக இருந்தால், அப்போது அவசர அவசரமாக சென்று புதுப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். எனவே முன்னதாகவே விவரங்கள் சரியானதாக இருக்கிறதா? என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தானே!

myAadhaar இணையதளம் வழியாக ஆதார் தகவல்களை எவ்வாறு புதுப்பிப்பது?:

ஸ்டெப் 1: UIDAI-இன் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு பெறப்பட்ட OTP-ஐ பயன்படுத்தி உள்நுழையவும்.

ஸ்டெப் 2: உங்கள் சுயவிவரத்தில் காட்டப்பட்டுள்ள உங்கள் அடையாளம் மற்றும் முகவரி விவரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துகொள்ளவும்.

ஸ்டெப் 3: தகவல்கள் சரியாக இல்லை என்றால், நீங்கள் மாற்ற வேண்டிய விவரங்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கான தக்க ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். உதாரணமாக புகைப்படம், முகவரிச் சான்று போன்றவை கொண்டு அப்டேட் செய்யலாம்.

ஸ்டெப் 4: ஒவ்வொரு ஆவணமும் 2 MB-க்கும் குறைவாகவும் JPEG, PNG அல்லது PDF வடிவிலும் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

ஸ்டெப் 5: உங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்து, "Submit" என்பதை கிளிக் செய்து உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

தேவைப்படும் ஆவணங்கள்: ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், மார்க் சீட், எலக்ட்ரிசிட்டி பில், வாட்டர் பில், கேஸ் பில், பேங்க் பாஸ்புக் போன்ற ஆவணங்கள் இதற்கு தேவைப்படலாம்.

ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைனிலும், நீங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க முடியும் அதற்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையங்களைப் பார்வையிடலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+