சென்னை: உங்கள் ஆதார் தகவல்கள் சரியாக இருப்பது மற்றும் எப்போதும் புதுப்பிக்கப்பட்டு இருப்பது அவசியம். ஏனெனில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கிய அரசாங்க ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. தற்போது, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இலவசமாக ஆதார் தகவல்களை புதுப்பிப்பதற்கான சிறப்பு சலுகையை வழங்கி வருகிறது. ஆனால், இந்த சலுகை விரைவில் முடிவடைய இருக்கிறது.
அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்ற உங்கள் ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்குகிறது. இந்தத் தேதியைத் தாண்டி, நீங்கள் எந்த ஆதார் தகவல்களைப் புதுப்பித்தாலும், அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, ஆதார் வைத்திருப்பவர்கள் காலக்கெடுவிற்கு முன் விவரங்களைப் புதுப்பித்து, சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இலவச ஆதார் அப்டேட் செய்வதற்கான கடைசி நாள்: இன்றைய நாளிலிருந்து 10 நாட்கள் கழித்து உங்களால் இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய முடியாது. அதாவது காலக்கெடுவாக ஜூன் 14, 2024 என UIDAI நிர்ணயித்துள்ளது. இந்த தேதிக்குப் பிறகு, ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
காலக்கெடுவுக்குப் பிறகு ஆதார் புதுப்பிக்க எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்: ஜூன் 14ஆம் தேதி காலகெடுவுக்குப் பிறகு ஆதார் புதுப்பிப்பவர்கள், ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.
ஆன்லைனில் ஆதார் தகவல்களை எப்படி புதுப்பிப்பது: இலவச சலுகையை பயன்படுத்தி ஆன்லைனில் உங்கள் ஆதார் தகவல்களை எளிதாக புதுப்பிக்கலாம். இதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டெப் 1: UIDAI-இன் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: 'Document Update' என்ற பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதார் நம்பர், கேப்ட்சா கோடு (Captcha Code) ஆகியவற்றை என்டர் செய்து
'Login with OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 5: புதுப்பிக்க வேண்டிய தகவலை (பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல்) தேர்ந்தெடுத்து, தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட டாக்குமெண்ட்களைப் பதிவேற்றவும்.
ஸ்டெப் 6: உங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்து, 'Submit' என்பதை கிளிக் செய்து உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
தேவைப்படும் ஆவணங்கள்: ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், மார்க் சீட், எலக்ட்ரிசிட்டி பில், வாட்டர் பில், கேஸ் பில், பேங்க் பாஸ்புக் போன்ற ஆவணங்கள் இதற்கு தேவைப்படலாம்.
ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைனிலும், நீங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க முடியும் அதற்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையங்களைப் பார்வையிடலாம்.


Click it and Unblock the Notifications