இந்தியாவில் பொது விநியோக திட்டம் கோடிக்கணக்கான மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள், தானியங்கள் கிடைப்பதை வழிவகை செய்கிறது. ரேஷனில் வாங்கக்கூடிய அரிசி ,பருப்பு, கோதுமை உள்ளிட்டவற்றை மட்டுமே உணவாக உட்கொள்ளக்கூடிய ஏராளமான குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
ரேஷன் கார்டு: இந்தியாவை சேர்ந்த குடிமக்கள் அனைவருமே அவர்களின் மாநிலங்களில் தங்களுடைய குடும்பத்தின் பெயரில் ரேஷன் அட்டை வாங்கி வைத்திருப்பது கட்டாயம். ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகளுக்கு மட்டுமே மானிய விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர ரேஷன் அட்டையை அடிப்படையாகக் கொண்டுதான் நாட்டில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 2.26 கோடி கார்டுகள்: தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை போன்ற முக்கியமான திட்டங்களுக்கு அடிப்படை ஆதாரமாக ரேஷன் அட்டை தான் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தம் 2 ,26 ,87,747 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 ,01, 13 ,917 பேர் பயனாளிகளாக இருக்கின்றனர்.
5 வகை ரேஷன் கார்டுகள்: தமிழ்நாட்டில் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) வைத்திருப்பவர்களுக்கு அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நியாய விலைக் கடைகளில் கிடைக்கும். தமிழ்நாட்டில் அதிகமானவர்களிடம் இந்த அட்டை தான் இருக்கிறது. அடுத்ததாக முன்னுரிமை குடும்ப அட்டைகள் அந்தியோதயா அன்ன யோஜனா (PHH-AAY) வைத்திருப்பவர்கள், 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் நியாய விலைக் கடைகளில் இருந்து வாங்கி கொள்ளலாம்.
அரசு அறிவிப்பு: இது தவிர முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள்(NPHH), , சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் (NPHH-S) , எப்பொருளும் இல்லாத அட்டைகள் (NPHH-NC) ஆகியவை குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இவர்களில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH), அந்தியோதயா அன்ன யோஜனா (PHH-AAY) அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

கேஒய்சி அப்டேட் செய்ய அறிவுரை: இந்த இரண்டு ரேஷன் கார்டுகளை வைத்திருக்கும் குடும்பங்கள் முதலில் கேஒய்சியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் பொதுவிநியோக இணையதளத்தில் இது ஒரு அறிவிப்பாகவே வெளியிடப்பட்டுள்ளது. அதில் PHH/ PHH-AAY ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய கேஒய்சி விவரங்களை ரேஷன் கடையில் சென்று அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்தாலும் கட்டாயம்: இந்த ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கக்கூடிய ஊரில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்று விரல் ரேகை அல்லது கண் கருவிழி சரி பார்ப்பு மூலம் இ கேஒய்சி முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ அல்லது வெளி மாநிலத்திலோ இருந்தாலும் கூட உங்களுக்கு அருகில் இருக்கும் நியாயவிலை கடைக்கு சென்று விரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு செய்து இ கேஒய்சி முடித்துக் கொள்ள வேண்டும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கேஒய்சி முறைகளை முடிக்கவில்லை என்றால் அந்த ரேஷன் கார்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கார்டே ரத்தாகலாம் அல்லது அதன் மூலம் கிடைத்த சலுகைகள் பறிபோகலாம் என சொல்லப்படுகிறது. எனவே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இயன்றவரை முன் கூட்டியே சென்று கேஒய்சி முடித்து கொள்வது நல்லது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications