ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே முகேஷ் அம்பானியின் காட்டி பெய்யும் முதலீட்டு மழை காரணமாக, முகேஷ் அம்பானி வளர்ச்சி இன்னும் உச்சத்தினை தொட்டு வருகிறது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவில் கடந்த 3 மாதங்களாக அதிக அளவில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறியுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதன் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அம்பானி அறிவித்தார்.
ஜியோவில் முதலீடு
பேஸ்புக், கூகுள், இன்டெல், ஜெனரல் அட்லாண்டிக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், அபுதாபியின் முபதாலா, சில்வர் லேக், பிஐஎஃப், குவால்காம் வென்சர்ஸ், சில்வர் லேக், பிஐஎஃப் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்யதுள்ளன. ஆக மொத்தத்தில் ஜியோவின் 25.24% பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இவற்றோடு கூகுள் நிறுவனமும் ரிலையன்ஸ் ஜியோவின் 7.7 சதவீதம் பங்கின் மூலம், 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடெயில் பங்குகளை வாங்க போகிறதா?
இந்த நிலையில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வரும் அமேசான் நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் 9.9% பங்குகளை வாங்கலாம் என்றும், இதற்காக இந்த நிறுவனங்களும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் இடி செய்திகள் கூறுகின்றது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட்டில் அமேசான் மூலோபாய பங்குகளை வாங்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
அமேசான் தரப்பில் எந்த கருத்தும் இல்லை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில், உள்ளூரில் சிறிய கடைகளை திட்டமிட்டது. எனினும் அமேசான் இது குறித்து எந்தவொரு கருத்தினையும் தெரிவிக்கவில்லை. அதோடு ரிலையன்ஸ் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
ஜியோமார்டினை மேம்படுத்த உதவும்
ஏற்கனவே கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சில ஜாம்பவான் களால் பலத்த முதலீடுகளை திரட்டியுள்ள இந்த நிறுவனம், 5ஜி சேவைக்கு உண்டான அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் டிஜிட்டல் வர்த்தகத்தினை இன்னும் மேம்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தது. இந்த நிலையில் அமேசானுடன் கைகோர்த்துள்ளது ஜியோமார்ட்டினை மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications