ஓரேயொரு அறிக்கையால் இந்தியாவின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமத்தை புரட்டிப்போட்டது மட்டும் அல்லாமல் பெரும் முதலீட்டு நிறுவனங்கள், ரீடைல் முதலீட்டாளர்கள் என அதானி குழுமத்தில் நேரடியாக மற்றும் மறைமுகமாக முதலீடு செய்துள்ள அனைத்து தரப்பினருக்கும் பயத்தைக் காட்டியது ஹிண்டன்பர்க் ரிசர்ச்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு 2023 ஜனவரி 24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலேயே அதானி குழுமத்திற்கும் சீன நாட்டவரான Chang என்பவருக்கும் என்ன தொடர்பு, Chang உடன் வினோத் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதில் துவங்கி பல கேள்விகளை அடுக்கியது ஹிண்டன்பர்க் அறிக்கை. இந்த நிலையில் Chang-யிடம் இருந்து ஒரு விளக்கம் கிடைத்துள்ளது.

அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியானதில் இருந்து Chang -ன் பெயர் பல வகையில் கூறப்பட்டாலும், தற்போது இவர் தைவான் நாட்டை சேர்ந்தவர் என்றும், தான் சீன நாட்டை சேர்ந்தவர் இல்லை என்றும் Morris Chang விளக்கம் கொடுத்துள்ளாதாக பிடிஐ தெரிவித்துள்ளது. Morris Chang தொடர்பின் மூலம் அதானி குழுமம் சீனர் உடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது.
அதானி குழுமத்தின் துறைமுகம், விமான நிலையம், ரயல்வே, மின்சார இணைப்பு மற்றும் இதர பல கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் கான்டிராக்ட் நிறுவனம் தான் PMC PROJECT INDIA PVT LTD. இந்த பிஎம்சி ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தில் தலைவராக இருப்பவர் தான் Morris Chang. இவர் சீன நாட்டவர் என கூறப்பட முக்கியமான காரணம் இவருடைய பாஸ்போர்ட்.
ஹிண்டன்பர்க் சம்பவத்திற்கு பின்.. அதானி குழுமத்தில் முதலீட்டை அதிகரித்த LIC..!!
இதுகுறித்த கேள்விக்கு ஈமெயில் மூலம் பதில் கொடுத்த Morris Chang, தான் தைவான் நாட்டு குடிமகன் என்றும், என்னுடைய பாஸ்போர்ட்-ல் Republic of China என்று இருக்கும். தைவான் நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் Republic of China தான். சீனாவின் அதிகாரப்பூர்வ பெயர் People's Republic of China, இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என ஈமெயிலில் பதில் கொடுத்துள்ளார் Morris Chang.
காங்கிரஸ் தரப்பில் Morris Chang சீனா நாட்டவர் என்றும், அவர் அதானி குழுமத்தில் முக்கியமான திட்டங்களில் பணியாற்றி வருவதும், சீன நாட்டவரின் தொடர்பு இருந்தும் அதானி குழுமம் தொடர்ந்து துறைமுகங்களை இயக்க விதிகளை பிரதமர் மோடி அரசு தளர்த்தியுள்ளது என எதிர்கட்சி விமர்சனம் செய்தது.


Click it and Unblock the Notifications