அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை பிப்ரவரி 7 ஆம் தேதி முடிவுகளை அறிவிக்கும், அதானி பவர் அடுத்த நாள் அதை வெளியிட உள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் அதானி குழும பங்குகளை அடமானம் வைத்து வாங்கி 1114 மில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே செலுத்தியது.
இதன் எதிரொலியாக இன்று அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் இன்று 15 சதவீத அப்பர்சர்கியூட் உயர்வை எட்டின.
ஹிண்டன்பர்க் அறிக்கை
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகளை உள்நாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து விற்பனை செய்து வரும் வேளையில் இன்று யாரும் எதிர்பார்க்காத வரையில் தடாலடி சரிவைப் பதிவு செய்துள்ளது.
பொரிஞ்சு வெளியத்
அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் கடந்த 3 வர்த்தக நாளில் பதிவான சரிவில் இருந்து 100 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பிரபல பங்கு முதலீட்டாளரான பொரிஞ்சு வெளியத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
100 சதவீத வளர்ச்சி
பிப்ரவரி 3 ஆம் தேதி அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 1095 ரூபாய் வரையில் சரிந்த நிலையில் இன்று 1962.70 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 100 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகப் பொரிஞ்சு வெளியத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த வாய்ப்பை யாரும் பயன்படுத்தவில்லை எனப் பொரிஞ்சு வெளியத் டிவீட்டுக்கு ஒருவர் பதில் டிவீட் செய்துள்ளார்.
பங்குகள்
இன்றைய உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணம் அதானி குழுமம் தனது நிறுவன பங்குகளுக்கு எதிராக வாங்கிய கடனை அடைந்தது மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.
1.11 பில்லியன் டாலர் கடன்
அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை அடமானம் வைத்து சுமார் 1114 மில்லியன் டாலர் அல்லது 1.11 பில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் கடனாகப் பெற்றுள்ளது.
9000 கோடி ரூபாய்
இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 82.67 ரூபாய், 1.114 பில்லியன் டாலர் எனில் கிட்டத்தட்ட 9000 கோடி ரூபாய் அளவிலான கடன். இந்தக் கடனுக்கான பேமெண்ட் தேதி என்னவோ செப்டம்பர் 2024 தான், ஆனால் அதானி குழுமம் இதை முன்கூட்டியே அடைத்துள்ளது.
3 முக்கிய நிறுவனங்கள்
இந்த 1.114 பில்லியன் டாலர் அளவிலான கடன் தொகையை முன்கூட்டியே செலுத்தியதன் மூலம் அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவன பங்குகள் வங்கி மற்றும் நிதி நிறுவன கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறது.
அதானி குழும பங்குகள்
இதன் மூலம் அதானி போர்ட்ஸ் & SEZ-ன் 168.27 மில்லியன் பங்குகள், அதானி கிரீன் எனர்ஜி-ன் 27.56 மில்லியன் பங்குகள், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் 11.77 மில்லியன் பங்குகள் விடுவிக்கப்படுகிறது. இது அனைத்தும் அதானி குழுமத்தின் நிர்வாகத்திடமே வர உள்ளது.


Click it and Unblock the Notifications