இந்திய பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கடுமையான சரிவை சந்தித்தது போல் அதானி குழும பங்குகளும் பெரும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்ப அனுமதி கோரிய நிலையில் அதானி குழும முதலீட்டாளரின் நம்பிக்கையை பெரிதும் பாதித்தது. இதனால் அடுத்தடுத்து பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தனர், இதன் விளைவு பல அதானி பங்குகள் 10 சதவீதத்திற்கு மேல் சரிவு, சந்தை மதிப்பில் பெரிய ஓட்டை.
அதானி குழுமத்தின் 10 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் ரூ.1.4 லட்சம் கோடி குறைந்து ரூ.12.2 லட்சம் கோடியாக சரிந்தது. அதானி கிரீன் எனர்ஜி 14 சதவீதம், அதானி என்டர்பிரைசஸ் 11 சதவீதம், அதானி எனர்ஜி 12 சதவீதம், அதானி போர்ட்ஸ் 7.5 சதவீதம் சரிந்தன. அம்புஜா சிமென்ட், ACC, அதானி டோட்டல் கேஸ் உள்ளிட்ட பிற நிறுவனங்களும் பெரும் சரிவில் முடிந்தன.

SEC ஏன் மின்னஞ்சல் மூலம் சம்மன் கோரியது?
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்தியா இரண்டு முறை SEC-இன் சம்மன் கோரிக்கைகளை நிராகரித்தது. அமெரிக்க அரசு மூலம் அனுப்பிய சம்மன் கோரிக்கைகளில் கையெழுத்து, அதிகாரப்பூர்வ முத்திரை போன்ற நடைமுறை குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டதாக SEC கூறியது.
இந்த நடைமுறைகள் ஹேக் ஒப்பந்தத்தின் கீழ் தேவையில்லை என்று SEC நீதிமன்றத்தில் தெரிவித்தது. டிசம்பரில் இரண்டாவது முறை நிராகரிக்கப்பட்டதால், அரசு அமைப்பு முறையில் சம்மன் அனுப்பாமல் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்ப அனுமதிக்க SEC நீதிமன்றத்தில் கோரீக்கை விடுத்தது.
வழக்கின் பின்னணி
2024 நவம்பரில் வெளியான குற்றச்சாட்டில் அதானி குழும உயர் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதானி கிரீன் எனர்ஜிக்கு மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் பெற்றதாக கூறப்பட்டது. இந்த திட்டத்திற்கு அமெரிக்க சந்தையில் முதலீட்டை திரட்டியிருக்கும் காரணத்தால் அதானியின் செயல்பாடுகள் அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், லஞ்ச ஒழிப்பு கொள்கைகள் குறித்து தவறான தகவல் அளித்ததாகவும் SEC குற்றம்சாட்டியது.
இந்திய அரசு இதை தனியார் நிறுவனம் மற்றும் அமெரிக்காவுக்கு தொடர்புடைய பிரச்சனை என்பதால் இந்த விவகாரத்தில் இருந்து விலகி இருந்தது. மேலும் டிசம்பர் மாதம் சம்மன் அனுப்பும் கோரிக்கையில் SEC-க்கு சம்மன் அனுப்ப அதிகாரம் உள்ளதாக என்பது குறித்து இந்திய சட்ட அமைச்சகம் கேள்வி எழுப்பியது.
அதானி குழுமத்தின் பதில்
இதேவேளையில் அதானி குழுமம் SEC முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. அவை அடிப்படையற்றவை என்று கூறியது. தங்கள் தரப்பு நியாயத்தை சட்ட வழிகளில் SEC எதிர்த்து போராடும் என்று தெரிவித்தது. மின்னஞ்சல் சம்மன் கோரிக்கை குறித்து உடனடி கருத்து தெரிவிக்கவில்லை.
பங்குச்சந்தை சரிவு ஏன்?
பங்குச்சந்தைகள் எப்போதும் ஒரு நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நிச்சயமின்மை, வெளிநாட்டு ஒழுங்குமுறை அமைப்பின் தலையீடு, முக்கிய பங்குதாரர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகியவை முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை அதிகரிக்கும். இறுதி தீர்ப்பு வரும் வரை அச்சம் நீடிக்கும், அல்லது இதற்கான தீர்வு காண கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை தொடரும். இத்தகைய சூழ்நிலையில் பல முதலீட்டாளர்கள் முதலில் பங்குகளை விற்று பிறகு பிரச்சனைகள் களைந்த பின்பு மீண்டும் வாங்குவது வழக்கம்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications