அதானி குழுமத்தின் மீது ஹிண்டர்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்ததில் இருந்தே, அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை என்பது பலரிடம் குறைந்துள்ளது எனலாம்.
அதானி குழுமம் என்ன தான் விளக்கம் கொடுத்தாலும், இன்று வரையில் பங்கு சந்தையில் அதானி குழும நிறுவனங்கள் சரிவது நிற்கவில்லை.
அதானி குழுமம் எப்படியேனும் தங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க முயற்சி செய்தாலும் அது கைகொடுக்கவில்லை என்றே கூறலாம்.
FPO ரத்து ஏன் தெரியுமா?
இந்தியாவில் இரண்டாவது பெரிய உரிமை பங்கு வெளியீடான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் FPO-வையே, முதலீட்டாளர்கள் நலன் கருதி ரத்து செய்வதாக அதானி குழுமம் அதிரடியாக களத்தில் இறங்கியது. அதோடு பங்குகளுக்கு எதிராக வாங்கிய கடனுக்கான கால அவகாசம் இருந்தாலும் கூட, முன் கூட்டியே செலுத்தியுள்ளது.
நிதி நிலைமை சீராக இருக்கு
இதன் மூலம் தங்களது நிதி நிலைமை என்பது சீராக இருப்பதாகவும் சொல்லாமல் சொல்லியுள்ளது எனலாம். இது தங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்த அதானி குழுமம் அடுத்தடுத்து திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.
மற்றொரு திட்டம் என்ன?
மேலும் அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து தற்போதைக்கு மூலதன முதலீடுகளை குறைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடன் அதிகளவில் இருப்பதாகவும், இதன் காரணமாக கிரெடிட் நிறுவனங்கள் கவலை எழுப்பி வருகின்றன. ஆக இனியும் கடன் வாங்கி முதலீடு செய்வதை குறைக்கலாம்.
மூலதன முதலீடுகள் குறையலாம்
இதனால் அதானி குழுமத்தின் மூலதன முதலீடுகள் என்பது குறையலாம். இது அதானி குழுமத்தின் வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. அதேசமயம் இருக்கும் கடனை செலுத்தி, கடனை குறைப்பதும், கடனை திரும்ப அடைப்பதும் அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தலாம். இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு சாதகமான ஒன்றாக மாறலாம் என நம்படுகின்றது.
எச்சரிக்கையுடன் இருக்கலாம்
மொத்ததில் அதானி குழும நிறுவனம் அதன் வளர்ச்சியினை மேற்கோண்டு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மிக கவனமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக புதிய முதலீடுகள் மற்றும் கடனில் எச்சரிக்கையுடன் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications