மும்பை: மின்சார துறையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமான அதானி டிரான்ஸ்மிஸன் தனது 25.1 சதவிகித பங்குகளை, கத்தார் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அத்தாரிட்டிக்கு விற்க திட்டமிட்டுள்ளது.
அதானி டிரான்ஸ்மிஸன் லிமிடெட் நிறுவனத்தின் 25.1 சதவிகித பங்குகளை வாங்க, கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி நிறுவனம் 3,200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கத்தார் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அத்தாரி, கத்தார் அரசுக்கு சொந்தமான ஹோல்டிங் நிறுவனமாகும். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனமாகும்.
மும்பை நகரில் சுமார் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 3 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோருக்கு சேவை செய்யும், ஒருங்கிணைந்த மின் வினியோக பரிமாற்றம் மற்றும் உற்பத்தி வணிகத்திற்கான உரிமதாரர் தான் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட். இந்த ஏஇஎம்எல் நிறுவனம் மும்பை நுகர்வோர் சந்தைப் பங்கு ஏறக்குறைய 67% பங்கு வகிக்கிறது. மேலும் 55% மின் வினியோகத்தையும் வழங்கி வருகிறது.
பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக அதானி டிரான்ஸ்மிஸன் மற்றும் கத்தார் முதலீடு 2023ம் ஆண்டளவில், ஏஇஎம்எல் வழங்கும் மின்சாரத்தில் 30%க்கும் மேற்பட்டவை சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் என்றும் இந்த இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இந்த நிலையில் அதானி டிரான்ஸ்மிஸனின் பங்கு விலை கிட்டதட்ட 4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 329 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனம் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1 பில்லியன் டாலர் நிதியை கடன் பத்திரம் மூலம் திரட்ட முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு தான் அதானி டிரான்ஸ்மிஸன் சில்லறை மின்சாரம் வினியோகம், பரிமாற்றம் மற்றும் உற்பத்தி தொடர்பான ரிலையன்ஸ் உள்கட்டமைப்பின் ஒருங்கிணைந்த வணிகத்தை வாங்கியது. இந்த நிலையில் இந்த நிறுவனம் மேலும் நிதியை திரட்டுவதற்காக இப்படியொரு முயற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையின் மத்தியில், நிறுவனங்கள் பல இவ்வாறு நிதி திரட்டும் பொருட்டு பங்குகளை விற்பது தற்போது வாடிக்கையான ஒரு விஷயமாகி விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ரிலையன்ஸ் நிறுவனம், சவுதி அராம்கோவிடம் இருந்து கணிசமான முதலீட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications