அய்யய்யோ! அதானி பங்குகள் தரை தட்டுதே..!! மொத்தமும் காலி..!

எக்ஸிட் போல் முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதும் மொத்த நம்பிக்கையும் உடைந்தது.

தற்போது 3ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை பல மாநிலங்களில் துவங்கியிருக்கும் வேளையில் NDA கூட்டணி 282 இடங்களிலும், இந்தியா கூட்டணி 218 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி சுமார் 60-85 இடத்தில் முன்னிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அய்யய்யோ! அதானி பங்குகள் தரை தட்டுதே..!! மொத்தமும் காலி..!

NDA கூட்டணி பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்காவிட்டால் பெரிய அளவிலான பங்குச்சந்தை சரிவு ஏற்படும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அப்படியே எதிரொலித்து வருகிறது. 11 மணியளவில் சென்செக்ஸ் 2454 புள்ளிகள் சரிந்து 73,996 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 768 புள்ளிகள் சரிந்து 22,495.70 புள்ளிகள் சரிந்துள்ளது.

இந்த நிலையில் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான, கௌதம் அதானியின் அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 18% சரிவுடன் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகிறது. திங்கட்கிழமை எக்ஸிட் போல் எதிரொலியால் ஹிண்டன்பெர்க் முந்தைய நிலையை அடைந்தது.

ஆனால் இன்று தேர்தல் முடிவுகள் பெரும் தாக்கத்தை அதானி குழும பங்குகள் மீது ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் மத்தியில் செவ்வாய்க்கிழமை அதானி குழுமத்தின் அனைத்து 10 நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன.

அதானி டோட்டல் கேஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என்டிடிவி பங்குகளும் தலா 8% சரிந்தன. நிஃப்டி-யில் அதானி போர்ட்ஸ் 7% குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில், அதானி பங்குகள் அதிக லாபம் ஈட்டின. பேரணியைத் தொடர்ந்து, அதானி பங்குகள் 16 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதன் சந்தை மூலதனம் ரூ. 20 லட்சம் கோடியை நெருங்கி அனைத்து ஹிண்டன்பர்க் பிரச்சனை மூலம் சந்தித்த இழப்புகளையும் மொத்தமாக தீர்த்து விட்டது.

இன்று 11 மணியளவில் அதானி குழுமத்தில் இருந்து பங்குச்சந்தையில் இருக்கும் 10 நிறுவனங்களின் நிலை

அதானி எண்டர்பிரைசஸ் - 14.52 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 15.00 சதவீதம் சரிவு
அதானி பவர் - 14.29 சதவீதம் சரிவு
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் - 18.53 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 17.62 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 15.71 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 8.97 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 9.66 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 14.92 சதவீதம் சரிவு
NDTV - 14.91 சதவீதம் சரிவு

இன்றைய சரிவின் மூலம் திங்கட்கிழமை பதிவான மொத்த உயர்வையும் அதானி குழுமம் இழந்துள்ளது.

இதற்கிடையில் ஜெப்ரீஸ் நிறுவனம் அதானி என்டர்பிரைசஸ் (டார்கெட் விலை ரூ.3,800), அதானி போர்ட்ஸ் (டார்கெட் விலை ரூ.1,640) மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் (டார்கெட் விலை ரூ.1,365) ஆகியவற்றிற்கு BUY என தர அறிவிப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.

கடந்த வாரம், CLSA நிறுவனம் தனது "மோடி பங்குகள்" பட்டியலில் அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ், ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகியவற்றை இணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மோடி 3வது முறையாக ஆட்சி பிடித்தால் Modi Stocks என அறிவிக்கப்பட்டு உள்ள பங்குகள் பெரிய அளவில் உயரும் என்பது முன் கூட்டியே கணிக்கப்பட்ட நிலையில் இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் உண்மையாகியுள்ளது.

இந்த பட்டியலில் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மற்றும் பிரதமர் மோடி அரசின் கொள்கைகளால் நேரடிப் பயனடைபவர்களாகக் கருதப்படும் பிற பெருநிறுவனங்களின் பங்குகளும் இடம்பெற்றுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+