அதானி வில்மர் குழுமத்தின் அலுவலகங்கள், குடோன் ஆகியவற்றில் நேற்று இரவு ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதானி வில்மர் நிறுவனத்தில் செய்யப்பட்ட ஆய்வுக்கு காரணம் இந்நிறுவனம் ஜிஎஸ்டி தொகையை டெபாசிட் செய்யவில்லை என்று வதந்தி பரவி வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரி துறையின் ஆய்வு குறித்த விளக்கத்தை அதானி வில்மார் இன்று விடுத்துள்ளது.
இந்த விளக்க அறிக்கையில் ஜிஎஸ்டி வரி குறித்த குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்துள்ளது, மேலும் இது வழக்கமான சோதனை என்றும், வரித்துறை அதிகாரிகளுக்கு நிர்வாகமும், ஊழியர்களும் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அதானி வில்மர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி வில்மர்
அதானி வில்மர் நிறுவனத்தின் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டிப்போ கிடங்குகிற்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் வருகை குறித்து அதானி வில்மர் வெளியிட்ட அறிக்கையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல கிடங்குகளில் ஒன்றான பர்வானூவில் உள்ள அதானி வில்மரின் டிப்போ கிடங்கிற்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்று மாலை வந்தனர்.
வழக்கமான ஆய்வு
ஜிஎஸ்டி அதிகாரிகளின் இந்த வழக்கமான ஆய்வின் போது அதானி வில்மர் நிறுவன ஊழியர்கள் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் உள்ளூர் அதிகாரிகளுக்கு வழங்கினர்.
எந்த முறைகேடுகளும் இல்லை
அதானி வில்மர் நிறுவனத்தில் நடத்திய செயல்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளில் எந்த முறைகேடுகளையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை. மேலும் அதானி வில்மர் நிறுவனம் வரிப் பொறுப்பை ரொக்கமாகச் செலுத்த வேண்டும் பிரச்சனையை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம், விதி 868ன் கீழ் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் ரொக்கமாக ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை என விளக்கம் கொடுத்துள்ளது.
சோதனை
அதானி வில்மர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் வழக்கமான ஆய்வு எனவும், எவ்வித சோதனை நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளது.
முறையான வணிகம்
பொறுப்பான மற்றும் வெளிப்படையான முறையில் வணிகத்தை நடத்துவதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். எங்கள் செயல்பாடுகள் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முழுமையாக இணங்குகின்றன. மேலும் வரித் துறை அதிகாரிகள் வருகைக்குப் பின்பு டிப்போ செயல்பாடுகள் வழக்கமாகச் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுப் பொய்
அதானி வில்மர் குழுமத்தின் மீதான சோதனைக்கு முக்கியக் காரணம் இந்நிறுவனம் ஜிஎஸ்டி தொகையை டெபாசிட் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளது அதானி வில்மர்.
5 ஆண்டு ஜிஎஸ்டி
இதேபோல் ஹிமாச்சல பிரதேசத்தில் அதானி வில்மர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை என்பதால் இந்த நள்ளிரவு சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் அனைத்தும் தவறு என அதானி வில்மர் தனது அறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications