ஹிமாச்சலப் பிரதேச மாநில கலால் மற்றும் வரித் துறையினர் அதானி குழும நிறுவனங்களில் முக்கிய நுகர்வோர் துறை நிறுவனமாக இருக்கும் அதானி வில்மர் ஸ்டோர் மற்றும் குடோனில் ஆய்வு செய்ததனர்.
ஹிமாச்சலப் பிரதேச மாநில கலால் துறையின் தெற்கு அமலாக்கப் பிரிவின் ஒரு குழுவினர் புதன்கிழமை நள்ளிரவு அதானி வில்மர் ஸ்டோர்களில் சோதனை செய்ய சென்றுள்ளனர்.
எதற்காக இந்தத் திடீர் ஆய்வு..? இதை தொடர்ந்து அதானி குழுமம் இது வழக்கமான ஆய்வு தான், சோதனை இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது.
ஜிஎஸ்டி விதிமீறல்
ஜிஎஸ்டி விதிமீறல்கள் தொடர்பாக அதானி வில்மர் குழுமத்தின் அலுவலகங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் சென்றுள்ளதாக இன்று காலை முதல் தகவல் வெளியானது. இதில் முக்கியமாக அதானி வில்மர் குழுமத்தின் மீதான சோதனைக்கு முக்கியக் காரணம் இந்நிறுவனம் ஜிஎஸ்டி தொகையை டெபாசிட் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியானது. இதற்கு தகுந்த விளக்கத்தையும் கொடுத்துள்ளது.
இன்புட் டாக்ஸ் கிரெடிட்
மேலும் மாநில கலால் மற்றும் வரித் துறையினர் அதானி வில்மர் நிறுவனத்தின் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கோரிக்கைகள் பற்றிய ஆதாரங்களைத் திரட்ட இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
ஆனால் இது சோதனை இல்லை வழக்கமான ஆய்வு தான் அதானி வில்மார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
5 வருடம்
இதேபோல் ஹிமாச்சல பிரதேசத்தில் அதானி வில்மர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்பதால் இந்த நள்ளிரவு ரெய்டு நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சோதனையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ரொக்கம்
ஆனால் ஹிமாச்சல பிரதேச மாநில கலால் மற்றும் வரித் துறையினர் அதானி வில்மர் நிறுவன குடோன்களில் ஆவணங்கள் சரிபார்ப்பு பணியை இரவு நீண்ட நேரம் செய்ததாகவும், இதில் சந்தேகத்திற்குரிய ரொக்க பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக ஆஜ்தக் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாக தனது விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி வில்மார் விளக்கம்
ஜிஎஸ்டி விதிமீறல்கள் தொடர்பாக அதானி வில்மர் குழுமத்தின் அலுவலகங்கள், குடோன் ஆகியவற்றில் நேற்று இரவு ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு செய்தது. இது வழக்கமான ஆய்வு என்றும், வரித்துறை அதிகாரிகளுக்கு நிர்வாகம், ஊழியர்களும் ஒத்துழைப்பு கொத்தாகவும் அதானி வில்மர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி வில்மர்
அதானி வில்மர் நிறுவனம் மளிகைப் பொருட்களையும் பெரிய அளவில் தயாரித்தும், பேக் செய்தும் இறக்குமதி செய்தும் நாடு முழுவதும் சப்ளை செய்கின்றன. குறிப்பாக சமையில் எண்ணெய் வர்த்தகத்தில் அதானி வில்மர் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது.
நுகர்வோர் வர்த்தகம்
அதானி வில்மர் நிறுவனம் மளிகைப் பொருட்களையும் பெரிய அளவில் தயாரித்தும், பேக் செய்தும் இறக்குமதி செய்தும் நாடு முழுவதும் சப்ளை செய்கின்றன. குறிப்பாக சமையில் எண்ணெய் வர்த்தகத்தில் அதானி வில்மர் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது.
ஹிமாச்சலப் பிரதேச அரசு
சில நாட்களுக்கு முன் ஹிமாச்சலப் பிரதேச அரசு, இரண்டு சிமென்ட் தொழிற்சாலைகள் மூடப்பட்டது மற்றும் லாரி ஆப்ரேட்டர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளுக்குத் தீர்வு காண விரும்புவதாகவும், அதானி குழுமத்துடன் தொழில்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஹிமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு சனிக்கிழமை கூறினார்.
சிமெண்ட் தொழிற்சாலை
ஏசிசி லிமிடெட் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பர்மனா (பிலாஸ்பூர் மாவட்டம்) மற்றும் தர்லாகாட் (சோலன் மாவட்டம்) ஆகிய இடங்களில் உள்ள இரண்டு சிமென்ட் தயாரிப்பு தொழிற்சாலைகளைச் சரக்குக் கட்டணம் தொடர்பான சர்ச்சையால் டிசம்பர் 14, 2022ல் மூடப்பட்டன.
அதானி குழும வர்த்தகம்
அதானி குழுமத்திற்கும் ஆரம்பம் முதல் ஹிமாச்சலப் பிரதேசம் முக்கிய வர்த்தகத் தளமாகக் கொண்டு உள்ளது. இந்த மாநிலத்தில் அதானி குழுமம் பழங்களுக்கான ப்ரீசர் கட்டமைப்புகள் இருந்து மளிகைப் மளிகை பொருட்கள் விநியோகம் வரை மொத்தம் ஏழு நிறுவனங்களை ஹிமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே கொண்டுள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவு
அதானி வில்மர் நிறுவனம் அதன் டிசம்பர் காலாண்டு முடிவுகளைப் பிப்ரவரி 8 அன்று அறிவித்தது, அதன் ஒருங்கிணைந்த லாபம் 16 சதவீதம் அதிகரித்து 246.16 கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications