பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்தாலும் விலை குறையாது.. ஏன் தெரியுமா.. ?

நம்மில் பலர் அண்டை மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்தால் அங்கு சென்று டேங்க் தளும்ப தளும்ப நிரப்பிவிட்டு வருவோம். சென்னை மக்கள் பாண்டிச்சேரிக்கும், ஓசூர் மக்கள் பெங்களூருக்கும் சென்று பெட்ரோல், டீசல் நிரப்புவது வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.

இந்த வழக்கத்தை கார் ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர், லிட்டருக்கு 4-6 ரூபாய் மிச்சம் பிடிக்க முடியும் என்றால் யார் விடுவார்கள் சொல்லுங்க.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்தாலும் விலை குறையாது.. ஏன் தெரியுமா.. ?

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது, இதுதவிர மத்திய அரசு வரியை உயர்த்துவது, குறைப்பதை தாண்டி மாநில அரசும் இதன் மீதான வரியை கூட்டியும் குறைத்தும் வருகிறது.

இதனால் பெரும் பகுதி மக்கள் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து அவ்வபோது விவாதம் செய்து வருகின்றனர். உண்மையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புகள் கொண்டு வந்தால் இதன் விலை குறையுமா..? ஏன் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவில்லை..?

சரக்கு மற்றும் சேவை வரி: இந்தியாவில் ஜிஎஸ்டி (Goods and Services Tax - GST) அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, மத்திய மற்றும் மாநில அரசுகள் சரக்குகள் மற்றும் சேவைகள் மீது பல வகையான வரிகளை மறைமுக வரி விதிப்பு முறையின் கீழ் விதித்து வந்தது.

இதன் காரணமாக, பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்போது, அவற்றின் மீது பல முறைகளிலும், வெவ்வேறு விகிதங்களிலும் வரி விதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு முறையும் அவை வேறு மாநிலத்திற்குள் நுழையும் போதும், மீண்டும் வரி விதிக்கப்பட்டது. இது சிக்கலானதாகவும், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பெரும் சுமையாகம் இருந்தது.

இந்த சிக்கலை தீர்ப்பதற்காக, விற்பனை வரி, சேவை வரி, சுங்க வரி போன்ற பல வரிகளை ஒரே வரியாக மாற்ற காங்கிரஸ் அரசு பல வருடங்களாக விவாதம் செய்து இதற்கான திட்டத்தை தீட்டி அமல்படுத்தாமல் வைத்திருந்தது, ஆனால் பிஜேபி அரசு 2014ல் ஆட்சிக்கு வந்த பின்பு ஜிஎஸ்டி முறையை அமல்படுத்தியது.

ஜிஎஸ்டி முறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதால், மாநிலங்களுக்கு இடையே உள்ள வரி தடைகளை அகற்றியது. நிறுவனங்களுக்கு இது எளிதாக்கினாலும், மாநிலங்களுக்கு இது பெரும் சுமையாகவே இன்று வரையில் இருக்கிறது. ஆர்பிஐ இன்று வரையில் உணவு பணவீக்கத்தை குறைப்பதற்காக போராடி வருகிறது.

ஏனென்றால், ஜிஎஸ்டி வருவாய் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பிரிக்கப்பட வேண்டும், இதனால் ஜிஎஸ்டி முறையின் கீழ் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.

இதை சரி செய்யும் விதமாக மத்திய அரசு "மதுபானம், எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றை தற்போது ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே வைத்திருப்போம். இதற்கிடையில் மாநிலங்கள் வரி வருவாயை அதிகரிக்க பிற வழிகளை கண்டறிவதில் கவனம் செலுத்த வேண்டும் என மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.

இதற்கிடையில், மத்திய அரசு பான் மசாலா, சிகரெட் அல்லது கார்பனேட்டட் குளிர்பானங்கள் போன்றவற்றின் மீது கூடுதல் வரிகளை விதித்து அதில் வரும் பங்கீட்டை மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படும். 2026 வரையிலான காலக்கட்டத்தில் வரி வருவாய் பின்தங்கியிருந்தால் வரி வருவாயில் கூடுதலாக ஒரு பகுதியை மாநிலங்கள் உடன் பகிர்ந்து கொள்வோம்" என்று மத்திய அரசு கூறியது.

இதன் வாயிலாக மாநில அரசுகள் ஜிஎஸ்டி அமல்படுத்த ஒப்புக்கொண்டன, அதன் பிறகு எந்த மாற்றமும் இதுவரையில் நடக்கவில்லை. எரிபொருள் இன்னும் மாநிலங்கள் ஈட்டும் வருவாயில் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமாயின் மாநில அரசின் மொத்த வரி வருவாயில் 11-17 சதவீதம் வரை எரிபொருள் மீதான வரி வருமானம் தான்.

சராசரியாக 100 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்பட்டால், எரிபொருள் விற்பனை நிலையங்கள் 60 ரூபாய்க்கு எரிபொருளை வாங்கி, மீதமுள்ள 40 ரூபாயை வரியாக செலுத்துகின்றன. இது எரிபொருளின் அடிப்படை விலையில் சுமார் 67% வரியாகும்.

பெட்ரோலியத்தை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது எரிபொருள் விலையைக் குறைக்க உதவாது. ஏனென்றால், மத்திய மற்றும் மாநில அரசுகள் தற்போது ஈட்டும் வரி வருவாயை ஈடுசெய்ய, அதிகப்படியான வரியை ஜிஎஸ்டியாக விதிக்க வேண்டியிருக்கும்.

தற்போதுள்ள 28% என்ற உயர்ந்த ஜிஎஸ்டி விகிதம்கூட இந்த இழப்பை ஈடுசெய்ய போதுமானதாக இருக்காது. இதற்கு மாறாக மாறாக, 28% ஜிஎஸ்டி விதிப்பது வருவாய் இழப்பை ஏற்படுத்தி, பிற பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரிகளை உயர்த்துவதற்கு வழிவகுக்கும்.

இது மக்களின் அன்றாட செலவுகளை அதிகரித்து மொத்தமாக விலைவாசியை அதிகரிக்கும், அல்லது மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு அளிக்கும் மானியத்தை குறைக்க வழிவகுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+