இந்தியாவின் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் வரலாறு காணாத விதமாக கடந்த 5 வருடத்தில் தங்களுடைய வர்த்தகத்தை அதிகளவில் விரிவாக்கம் செய்துள்ளது மறக்க முடியாது. அந்த வகையில் இதில் சற்று பின்தங்கி இருந்த ஆதித்யா பிர்லா குழுமம் தற்போது தனது ஆட்டத்தை துவங்கியுள்ளது.
இந்தியாவில் எப்போதும் தங்கம், வைரம் நகைகளுக்கு டிமாண்ட் குறையாது. குறிப்பாக விலை குறைந்தாலும் சரி, உயர்ந்தாலும் சரி எப்போதும் நகை விற்பனை அனல் பறக்கும். இத்துறையில் ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் இருப்பது மட்டும் அல்லாமல் டாடா குழுமம் டைட்டன் நிறுவனத்தின் வாயிலாக தனிஷ்க் உட்பட பல்வேறு பிராண்டுகளின் கீழ் டிசைனர் நகைகளை விற்பனை செய்கிறது.

இந்த நிலையில் டாடா-வின் டைட்டன் நிறுவனத்திற்கு போட்டியாக ஆதித்யா பிர்லா குழுமம் பிராண்டெட் நகைகளை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் புதிதாக இறங்க முடிவு செய்துள்ளது. இதற்காக 5000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய திட்டமிட்டுள்ளது ஆதித்யா பிர்லா குழுமம்.
இந்த 5000 கோடி ரூபாய் முதலீட்டின் வாயிலாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரீடைல் நகை கடைகளை திறக்க உள்ளது. அதித்யா பிர்லா குழுமம் இதற்கு முன்பு பெயின்ட், கட்டுமான பொருட்களுக்கான B2B வர்த்தகத்தை துவங்க முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆதித்யா பிர்லா குழுமம் முற்றிலும் மாறுப்பட்ட வர்த்தகத்தில் இறங்கியுள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமம் புதிய நகை கடை வர்த்தகத்தை Novel Jewels என்ற பெயரில் நடத்த உள்ளது. இந்த நகை கடை மூலம் இந்திய மக்களுக்கு டிசைனர் அடிப்படையிலான டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உயர் தர நகைகளை விற்பனை செய்ய உள்ளது ஆதித்யா பிர்லாவில் Novel Jewels பிராண்ட்.
இந்த பிராண்ட் நகை விற்பனை பிரிவை ஆதித்யா பிர்லா குழுமத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உயர்மட்ட நிர்வாக குழு தேர்வு செய்த அதிகாரிகள் நிர்வாகம் செய்ய உள்ளனர். சமீபத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கிய பொறுப்பில் குமார் மங்களம் பிர்லாவின் மகள் மற்றும் மகன் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஜுவல்லரி சந்தை 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 90 பில்லியன் டாலர் மதிப்புடைய சந்தையாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications