ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சியும், பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தாலிபான்கள் கைப்பற்றி, பல வருடங்களாகப் பல நாடுகளின் உதவியால் உருவான ஆட்சி மொத்தமாகக் கவிழ்ந்தது. இதேவேளையில் அந்நாட்டின் வளர்ச்சி, பொருளாதார சீர்திருத்தம், பெண்கள் முன்னேற்றம் அனைத்தும் தூள்களாக உடைந்தது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 450 நாட்களுக்கு மேலாக பெண்கள் பல்கலைக்கழக கல்வி தடை செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்று TOLO செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் கடும் பாதிப்பு அடைந்துள்ள பெண் மாணவிகள், தங்கள் கல்வித் தடை நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தலிபான் தலைமையிலான தற்காலிக அரசாங்கத்தை வலியுறுத்திப் பேசிய கதீஜா என்ற மாணவி, "பெண்களின் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அது குடும்பம் முழுவதின் கல்வியையும் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இதை புறக்கணிப்பது சமூகத்தின் கல்வி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கும்" என்று கூறியதாக டோலோ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
கதீஜா-வின் கருத்தை ஆதரித்துப் பேசிய நாரோ என்ற மற்றொரு மாணவி, "பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளின் கதவுகளைப் பெண்களுக்குத் திறக்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் வலுவான மற்றும் முற்போக்கான சமூகத்தைக் கட்டமைப்பதற்குப் பெண்களின் கல்வி அவசியம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து தலிபான்களிடமிருந்து எந்த புதிய அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்றாலும், பெண்களின் கல்வி உரிமை குறித்து தற்காலிக அரசு முன்னர் அளித்த உத்தரவாதங்கள் இந்தி செய்தி மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டு உள்ளது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக, பெண் மாணவிகளுக்குப் பல்கலைக்கழக கல்வியும் மறுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications