சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 2 நாட்கள் ஏறுவது, 2நாட்கள் விலை இறங்குவது என மக்களுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. தங்கம் விலை குறைகிறதே வாங்கி விடலாம் என மக்கள் எண்ணும் போது திடீரென விலை உயர்ந்து விடுகிறது.
சென்னையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிகபட்சமாக நவம்பர் 13ஆம் தேதி அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 11,900 ரூபாய் என்ற இந்த மாதத்திற்கான உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் தங்கம் 95 ,200 ரூபாய் என ஆனது. இதனை அடுத்து தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கி விட்டது என சாமானிய மக்கள் கலக்கமடைந்தனர் .

இந்நிலையில் தங்கத்தின் விலை சரிவடைய தொடங்கியது நவம்பர் 17ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,540க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமையான நேற்று கிராமுக்கு 140 ரூபாய் என தடாலடியாக குறைந்து 11,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை குறைவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் திடீரென தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
கோவை,மதுரை, திருச்சியில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?
சென்னை 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்திருக்கிறது . சென்னையில் நேற்று 11,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 11,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. நேற்று 91,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 92,000ஐ எட்டியது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 109 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 12,546 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் என பார்க்கும்போது நேற்று 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்து 99 ,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் கிராமுக்கு 872 ரூபாய் விலை உயர்ந்து 1,00,368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 18 கேரட் தங்கம் இன்று விலை உயர்ந்திருக்கிறது. கிராமுக்கு 90 ரூபாய் விலை உயர்ந்து 9,600 ரூபாயையும் சவரனுக்கு 720 ரூபாய் விலை உயர்ந்து 76 ,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்றைய தினம் தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது . ஒரு கிராம் 173 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3,000 ரூபாய் விலை உயர்ந்து 1, 73,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .நவம்பர் ஒன்றாம் தேதியுடன் ஒப்பிடும்போது சென்னையில் வெள்ளி விலை நவம்பர் 13ஆம் தேதி அன்று 183 ரூபாய் என உச்சத்தை தொட்டது இதனை அடுத்து விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
More From GoodReturns

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications