சென்னை: சர்வதேச பொருளாதார நிலைமைகள், உள்நாட்டில் தேவை, பண்டிகை காலங்கள் என இந்தியாவில் தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்து சாமானிய மக்களுக்கே சற்றே நிம்மதியை தந்த தங்கம் இன்று என்ன ஆனது? விலை குறைந்ததா அல்லது உயர்ந்ததா என்பதை விரிவாக பார்க்கலாம்.
22 கேரட் தங்கம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கடந்த திங்கள்கிழமை அன்று ஒரு கிராம் 9,155 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அன்று ஒரு கிராம் 9,145 ரூபாய் என விலை குறைந்தது., புதன்கிழமையான நேற்று மேலும் விலை குறைந்து 9,100 ரூபாய் என விற்பனையானது. இந்த நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் விலை உயர்ந்து 9,105 ரூபாய் என மாறி இருக்கிறது.

ஒரு சவரன் எவ்வளவு: 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் திங்கள்கிழமை அன்று 73,240 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே செவ்வாய்க்கிழமை 73,160 ரூபாய்க்கும், நேற்று 72,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 72,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த திங்கள்கிழமையுடன் ஒப்பிடுகையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.
24 கேரட் தங்கம்: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை சென்னையில் ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் விலை உயர்ந்து 9933 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 40 ரூபாய் விலை உயர்ந்து 79,464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 50 ரூபாய் விலை உயர்ந்து 99,330 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை: 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் 7,500 ரூபாய்க்கும் ஒரு சவரன் 60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் 124 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,24,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
விலை உயர என்ன காரணம்: சர்வதேச காரணிகளே தங்கம், வெள்ளி விலை மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு தொடர்பாக தினந்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொழில்துறையில் வெள்ளிக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பதே அதன் விலை ஏற்ற இறக்கங்களுக்கு முக்கிய காரணம். சிப்கள், ஸ்மார்ட் போன்கள், சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றில் வெள்ளியின் பயன்பாடு அதிகமாக இருப்பதே உலகளவில் அதன் தேவை அதிகரிக்க காரணமாக உள்ளது. இது விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications