சென்னை: இந்தியாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்துகின்றனர். வங்கி சேவையில் தனியார் நிறுவனங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் தனியார் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான மினிமம் பேலன்ஸை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன .
கடந்த வாரம் தான் ஐசிஐசிஐ வங்கி நகர்புறங்களில் மற்றும் பெரு நகரங்களில் ஐசிஐசிஐ வங்கியில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்பு எனப்படும் Monthly average balance ஐ உயர்ந்த்தியது. நகர்ப்புறங்கள் மற்றும் பெருநகரங்களில் ஆகஸ்ட் 1 முதல் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு தொகை 10,000 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் என உயர்த்தியது. வாடிக்கையாளர்களின் எதிர்ப்பை அடுத்து ஐசிஐசிஐ வங்கி தன் முடிவை மாற்றி மினிமம் பேலன்ஸ் 50,000 ரூபாய் என்பதை 15,000 ரூபாய் என மாற்றி அமைத்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியை தொடர்ந்து தற்போது ஹெச்டிஎப்சி வாங்கியும் தங்களுடைய சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் அளவை உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது . ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தங்களுடைய வங்கியில் பெருநகரம் மற்றும் நகர் பகுதிகளில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மினிமம் ஆவரேஜ் பேலன்ஸ் எனப்படும் சராசரி மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு தொகையாக 25 ஆயிரம் ரூபாய் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது . இதற்கு முன்பு வரை இந்த தொகை 10,000 ரூபாயாக தான் இருந்தது.
ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கி அவர்களுக்கு இது பொருந்தும் எனவும் ஏற்கனவே ஹெச்டிஎப்சி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய நிலையே தொடரும் என்றும் ஹெச்டிஎப்சி செய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் இந்த மினிமம் பேலன்ஸை பராமரிக்கவில்லை என்றால் அபராத தொகை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு 600 ரூபாய் அல்லது பராமரிக்கப்படாத தொகையில் ஆறு சதவீதம் இதில் எது குறைவாக இருக்கிறதோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறு நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என ஹெச்டிஎஃப்சி தெரிவித்திருக்கிறது .
இந்தியாவில் பொதுத்துறை வகைகளான எஸ்பிஐ, கனரா , பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் எல்லாம் சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் என்ற ஒரு நடைமுறையே இல்லை. பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக தனியார் வகைகள் தற்போது மினிமம் பேலன்ஸ் அளவை உயர்த்துவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோடக் மகேந்திரா , யெஸ் வங்கி ஆகியவற்றிலும் மினிமம் பேலன்ஸ் பராமரிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கும் முறை நடைமுறையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications