ஆட்டையப்போட புது ஐடியா.. ரூ. 82,500-ஐ மோசடி செய்து வசமாக சிக்கிய நபர்..!

ஆக்ரா: தினுசு தினுசா மோசடி செய்து மக்களின் பணத்தை பறிக்கும் மோசடிக்காரர்கள் எங்கிருந்துதான் ஐடியாக்களை எடுக்கின்றனர் என்பது தெரியவில்லை. நவீன டிஜிட்டல் உலகத்தில் பேப்பர்-லெஸ் சமூகத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். இதனால் வங்கிக்கு செல்லும் மக்களின் வரத்தும் குறைந்தே உள்ளது. அனைத்தையும் டிஜிட்டல் முறையில் செய்வதால் ஹாக்கர்களுக்கு இன்னும் வசதியாகிவிட்டது. இந்தப் பதிவில் ரூ.82,500 இழந்து, பிறகு அந்தப் பணத்தை திரும்பப் பெற்ற வணிகரின் சுவாரசியக் கதையை பார்ப்போம்.

பிஷிங் லிங்குகள், ஸ்பேம் மெசேஜ்கள் போன்றவற்றைக் கொண்டு மோசடி செய்து வந்த கும்பல் தற்போது புது ட்ரிக்காக KYC அப்டேட் செய்வதாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர்.

ஆட்டையப்போட புது ஐடியா.. ரூ. 82,500-ஐ மோசடி செய்து வசமாக சிக்கிய நபர்..!

ஆக்ராவில் உள்ள தாமேனா சாலையில், சந்தோஷ் என்ற இளைஞர் ஸ்டால் ஒன்றை நடத்தி வருகிறார். இவரை லலித் என்பவர் ஏமாற்றியுள்ளார். லலித் தான் ஒரு Paytm அதிகாரி எனக் காட்டிக் கொண்டு KYC சரிபார்ப்பை செய்யுமாறு சந்தோஷிடம் கூறியுள்ளார். KYC அப்டேட் செய்வதற்கு OTP-ஐ சொல்லுமாறு மோசடி செய்த லலித் சந்தோஷிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனை நம்பி சந்தோஷ் தனது மொபைல் நம்பருக்கு அனுப்பப்பட்ட OTP விவரங்களைப் பகிர்ந்துள்ளார். OTP விவரங்களை அனுப்பிய சிறிது நேரத்தில், சந்தோஷ் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 82,500 பணம் எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். சந்தோஷ் பயன்படுத்திய பேங்க் அக்கவுண்ட் அவருடைய மனைவியின் பெயரில் இருந்துள்ளது. தங்களது கணக்கில் இருந்து இவ்வளவு பெரிய தொகை ஆன்லைனில் ஏமாற்றப்பட்டது, இதுவே முதல்முறை என்று சந்தோஷ் கூறியுள்ளார். உடனே சந்தோஷ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை கண்டுபிடிக்க முயன்றனர். ஷம்ஷாபாத் இன்ஸ்பெக்டர் வீரேஷ் பால் கிரி கூறுகையில், இந்த வழக்கு ஆரம்பத்தில் எந்தவித சாட்சியும் இல்லாமல் கண்மூடித்தனமாக தெரிந்தது. அனால் அதன் பிறகு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் லலித் பைக்கில் அமர்ந்திருப்பது தெரியவந்தது. இதனை சாட்சியாக வைத்து போலீசார் பைக்கின் நம்பர் மற்றும் பைக்கின் உரிமையாளரை கண்டுபிடித்தனர். அதன் பிறகு 24 மணி நேரத்தில் மோசடி செய்த லலித் பிடிபட்டார். லலித் தான் செய்த குற்றத்தை ஒப்பு கொண்டதோடு பணத்தையும் சந்தோஷிடம் திருப்பிக் கொடுத்தார்.

எந்த ஒரு பேங்க் அதிகாரியும் KYC புதுப்பிப்பதற்காக UPI பின் அல்லது OTP போன்ற விவரங்களைக் கேட்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+