இன்றைய சூழலில் ஒரு அவசர தேவை என்றால் பொதுமக்கள் மனதில் உடனடியாக தோன்றுவது கைவசம் இருக்கும் தங்கத்தை அடகு வைக்கலாம் என்பதுதான். ஒரு சிறு தொழில் தொடங்குவது , மருத்துவர் தேவை , பிள்ளைகளுக்கான கல்வி செலவுகள் , திடீரென ஏற்படக்கூடிய நிதி நெருக்கடிகளுக்கு பெரும்பாலான மக்கள் நாடுவது நகைக்கடன்களை தான்.
தங்கள் கைவசம் இருக்கும் தங்க நகைகளை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் அடகு வைத்து உடனடியாக பணமாக மாற்றிக் கொள்கிறார்கள் . இவ்வாறு தங்க நகை கடன் வாங்கும் போது இந்த ஒரு ஆவணம் உங்கள் கையில் இருந்தால் வழக்கமான தங்க நகை கடனை விட குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியும், அதேபோல வழக்கத்தை விட கூடுதல் தொகையை கடனாகவும் பெற முடியும். அது என்ன என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம் .

இந்தியாவில் இரண்டு வகையான தங்க நகை கடன்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாவது வகையான கடன் குறித்து தெரிவது கிடையாது . சாதாரணமாக நாம் வங்கியில் சென்று நம்முடைய தங்க நகையை அடகு வைத்து கடன் வாங்குவது ஒருவகை, மற்றொன்று அக்ரி கோல்ட் லோன் அதாவது விவசாய தேவைகளுக்காக தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெறுவது.
சாதாரண நகைக்கடன்களை விட விவசாய நோக்கத்திற்காக தங்க நகை அடகு வைத்து வாங்கக்கூடிய கடன்களுக்கு வட்டி குறைவு ,இது மட்டும் இன்றி சாதாரண நகை கடனை விட இந்த விவசாய நகை கடனுக்கு கூடுதல் கடன் தொகையும் கிடைக்கும். இதற்கு உங்களிடம் நீங்கள் விவசாயம் செய்வதற்கான நிலத்தின் ஆவணங்கள் இருக்க வேண்டும்.

சொந்த தேவை, மருத்துவ உதவி, ஒரு சுய தொழில் செய்வதற்கு பணம் தேவை எனும்போது சாதாரண நகைக்கடன் நமக்கு கிடைக்கும் . இதுவே நீங்கள் ஒரு விவசாயியாக இருக்கிறீர்கள் ,பால் பண்ணை வைத்திருக்கிறீர்கள் அல்லது மீன் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுகிறீர்கள் எனும் போது உங்களுக்கு விவசாய தங்க நகை கடன் கிடைக்கும். இதனை நீங்கள் விவசாயப் பணிகளுக்கான மூலதனமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சொந்தமாக நிலம் வைத்து வேளாண்மை செய்பவர்கள், ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள் , விவசாயம் சார்ந்த சுயதொழில் புரிவோர்கள் ஆகியோருக்கு கிடைக்கும் .
உங்கள் பெயரில் பட்டா இருக்க வேண்டும் இல்லை என்றால் , குத்தகைக்கு எடுத்ததற்கான ஆவணம் இருக்க வேண்டும் . நகை கடன் பெறும் போது இந்த ஆவணத்தை தாக்கல் செய்தாக வேண்டும். அடுத்ததாக வழக்கமான நகை கடனில் அதிகபட்சம் 25 லட்சம் வரை தங்க நகை கடன் கிடைக்கும் ஆனால் விவசாய நகை கடனை பொறுத்தவரை 25 லட்சம் ரூபாய்க்கு மேலும் தங்க நகை கடன் கிடைக்கும் .
சராசரியாக ஏழு சதவீதம் என்ற அளவில் தான் இவ்வகை கடன்களுக்கு வட்டி இருக்கும். சில வங்கிகள் அதற்கு கீழும் குறைத்து வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இது வழக்கமான நகை கடன்களை விட குறைவு. பயிர் சாகுபடி சுழற்சியை அடிப்படையாகக் கொண்டுதான் கடனை திரும்ப செலுத்தக்கூடிய காலமும் இருக்கும் என்பதால் விவசாய பணிகளின் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இவ்வகை கடன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!



Click it and Unblock the Notifications